பூனைகளைப் பலர் வீட்டுப் பிராணியாக வளர்ப்பதுண்டு, ஆனால் இந்தப் பூனைகளைப் பற்றி பலருக்குத் தெரியாத சில சுவாரசியமான தகவல்களைத் தெரிந்துகொள்ளப் போரீர்களா? அப்படி என்றால், கண்டிப்பாக இந்த பதிவை படியுங்கள் நண்பர்களே!
1. பூனைகளின் காதுகளைக் கட்டுப்படுத்த மட்டும் 20 தசைப்பகுதிகள் உள்ளன.
2. உலகிலேயே இதுவரை மிகப்பெரிய பூனையாக கருதப்பட்ட பூனையின் நீளம்5 இஞ்ச், அதன் வயது 6.
3. பூனைகள் 5600 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வளர்க்கப்பட்டு வருவதற்கான சான்றுகள் உள்ளன.
4. 1960 ஆண்டில் புலனாய்வுத்துறை ஒரு பூனையினை மறைமுக உளவாளியாக மாற்றுவதற்கு பயிற்சி அளித்தது, ஆனால் அது ஒரு காரில் அடிபட்டு இறந்துவிட்டது.
5. எலிகளைக் கொல்வதால் பழைய எகிப்தின் வரலாற்றில் பூனைகளை கொல்வது சட்டத்திற்கு எதிரானதாக இருந்தது.
6. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போப் பூனைகளை பேயாகக் கருதினார், அதனால் அவற்றினை கொல்லவும் செய்தார்.
7. ஒரு பூனை அதன் நீளத்தினை விட 6 மடங்கு நீளத்தினைத் தாண்டக்கூடியது.
8. வீட்டில் வளர்க்கப்படும் பூனை ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்டை விட வேகமாக ஓடக்கூடியது.
9. ஒரு பூனை மார்பகப் புற்றுநோயினைக் கண்டுபிடிக்க ஒரு முறை உதவியது.
10. 5% ஆல் மட்டுமே தாங்கள் பூனை பிரியர்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
11. பூனை பிரியர்கள் சுமார் 11% உள்முகச் சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள்.
12. பூனை பிரியர்கள், நாய் பிரியர்களை விட புதிய அனுபவத்தில் ஈடுபடுவதில் ஆர்வமாக இருப்பார்கள்.
13. பூனையினை வளர்ப்பவர்களில் 17% பட்டதாரிகள்.
14. ஆண் பூனையினை வளர்ப்பவர்கள் உணர்ச்சிபூர்வமாக இருப்பார்கள்.
15. பூனைகள் அவற்றின் வாழ்நாளில் 70% உறங்கும் தன்மையுடையது.
16. பூனைகள் மட்டுமே மெல்லிய உறுமல் போன்ற சத்தம் எழுப்பி மனிதனுடன் பேசும் தன்மையுடையவை.