குழந்தைகளின் நினைவுத்திறனில் ஒரு புதிய கண்டுபிடிப்பு

குழந்தைகளின் நினைவுத்திறனில் ஒரு புதிய கண்டுபிடிப்பு
161 / Post Views.

நாம் சின்ன வயதில் இருக்கும்போது கணக்குப் பாடம் படிப்பதற்கு விரலைப் பயன்படுத்தி வந்தோம், ஆனால் கொஞ்சம் பெரியவர்களானவுடன் அந்தச் செயல்பாடு குறைந்துவந்து ஒரு காலகட்டத்தில் எந்த விரல்களையும் பயன்படுத்தாமலேயே கணிதத்தினை செயல்படுத்துகிறோம். இது எப்படி சாத்தியமானது? நமது நினைவுத்திறன் எப்போது வளர்ந்தது என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

இதைத்தான் ஸ்டான்ஃபோர்ர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சிந்தித்து, அதில் சில ஆச்சர்யமூட்டும் விஷயங்களையும் கண்டறிந்துள்ளனர். இவர்கள் செய்த ஆராய்ச்சியில் சுமார் 28 குழந்தைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டனர், அவர்களின் மூளைப்பகுதியின் முழுச்செயல்பாட்டினையும் காந்த ஒத்ததிர்வுகளால் பதிவுசெய்தனர். பின்னர் 1.2 ஆண்டுகளுக்குப் பிறகு அதேபோல் பதிவுசெய்தனர். இந்த ஆய்வில் 7-9 வயது, 14-17 வயது மற்றும் 19-22 வயது உடையவர்கள் கலந்து கொண்டனர். இவர்களிடம் சரியான வழிகாட்டுதல் கூறப்படாத கணக்குகள் வழங்கப்பட்டன. இங்குதான் அந்த ஆச்சர்யம் நடந்தது. 8.2 முதல் 9.4 வயதுடைய குழந்தைகள் பெரியவர்களைவிட விரைவாக சிந்தித்து செயல்பட்டனர். அவர்களின் நினைவகப் பயன்பாடும் மற்றவர்களை விட அதிகமாக இருந்தது.

இதற்கான காரணத்தினை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருந்த பதிவுகளின் மூலம் உறுதிபடுத்தினர். இந்தப் பதிவுகளில் ‘ஹிப்போகேம்பஸ்’ எனும் மூளையின் பின்புற பகுதியின் வளர்ச்சி குழந்தைகளுக்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மூளையின் பின்புறப்பகுதி நினைவுத்திறன், கணிதச் செயல்பாடு, புதிய நினைவகத்தின் உருவகப்பாடு போன்ற பல செயல்கள் நடைபெறும் இடமாகும். ஒரு சில குழந்தைகள் கணிதத்தில் மெதுவாக செயல்படுவதற்கு இந்தப் பகுதியே காரணம் எனவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *