கெமரா காதலர்!

கெமரா காதலர்!
96 / Post Views.

கர்நாடகா பெல்காமைச் சேர்ந்தவர் ரவி ஹொங்கேல் (வயது 49) இளம் வயதிலிருந்தே புகைப்படக்கலை மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த இவர் அதையே தன் தொழிலாகவும் மாற்றினார்.

பெல்காமில் ஸ்டூடியோ வைத்து திருமண நிகழ்ச்சிகள்,கோயில் திருவிழாக்களுக்கு புகைப்படம் எடுத்துக் கொடுத்து வருகிறார். கெமரா மீது உள்ள தீவிர காதலால் தன் மூன்று மகன்களுக்கும் கேனன்,நிகான்,எப்சன் என கெமராக்களின் பெயர்களை சூட்டியுள்ளார்.

அப்படியும் அவரது கெமரா ஆர்வம் அடங்கவில்லை. தன் மூன்று மாடி வீட்டையும் கெமரா போலவே வடிவமைத்து கட்டி அசத்தியுள்ளார்.இந்த வீட்டின் ஐன்னல்கள் கெமரா லென்ஸ் போல் அமைக்கப்பட்டுள்ளன.தூரத்திலிருந்து பார்க்கும்போது பிரமாண்ட கெமரா வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது போல் அந்த வீடு காட்சியளிக்கிறது. 

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *