உங்க கிட்சன்ல இருக்கற சில பாத்திரங்களுக்கும் உங்க எடை குறையறதுக்கும் சம்பந்தம் இருக்கு தெரியுமா?

உங்க கிட்சன்ல இருக்கற சில பாத்திரங்களுக்கும் உங்க எடை குறையறதுக்கும் சம்பந்தம் இருக்கு தெரியுமா?
135 / Post Views.

நம் வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்களைக் கொண்டே எடை இழப்பை பெற முடியும். வீட்டில் இருக்கும் சமையலறை கருவிகள் நமக்கு ஆரோக்கியமான உணவுகளை தயாரிக்க உதவுகிறது. எனவே நீங்கள் எடை இழப்பு பயணத்தை மேற்கொள்ள நினைத்தால் இந்த கருவிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

எடை இழப்பு என்பது கடினமான காரியம் எல்லாம் கிடையாது. வீட்டில் இருக்கும் சமையல் அறை பொருட்களை வைத்தே உங்க எடையை இழக்க முடியும். நீங்கள் சாப்பிடும் உணவுகளின் கலோரி அளவை பராமரிப்பது எடை இழப்பு நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவறாமல் உடற்பயிற்சி செய்வதோடு உங்க எடை இழப்பிற்கு தகுந்த மாதிரி உணவு முறையில் மாற்றங்களையும் செய்ய வேண்டும்.

தேவையற்ற கலோரி உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது தான் ஏராளமான பிரச்சனைகள் உருவாகிறது. தேவையற்ற கொழுப்புகள் உடலில் தேங்கி உடல் பருமனை உண்டாக்கி விடுகிறது. உங்க சமையலறை பொருட்களை வைத்தே எடை இழப்பை பெற முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மாண்டோலின்

 

மாண்டோலின் என்பது ஒரு கருவியாகும். இது காய்கறிகளை துண்டுகளாக வெட்டுவதற்கு பயன்படுகிறது. சாலட்கள் மற்றும் காய்கறிகளை தயாரிப்பதற்கு இது உதவியாக இருக்கும். என இதன் மூலம் காய்கறிகளை நறுக்கி நீங்கள் சாப்பிட்டு வரலாம். உங்க

சோம்பேறித்தனத்தை இது போக்கி விடும். காய்கறிகளில் அதிக நார்ச்சத்துக்கள் இருப்பதால் நீங்கள் பசியற்றதாக உணரலாம். இது உங்க அன்றாட உணவில் பெரிய மாற்றத்தை கொடுக்கும்.

​சமையலறை அளவு

 

ஒரு நாளைக்கு தேவையான உங்க கலோரி தேவைகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்க தினசரி தேவைகளை உன்னிப்பாக கவனிப்பது, உங்க பழக்க வழக்கங்கள் எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதற்கான பொதுவான விழிப்புணர்வை தர உதவுகிறது. எனவே நீங்கள் சமையலறை அளவை பயன்படுத்துவது மிகவும் நல்லது.

 

​ஸ்பைரைலைசர்

 

பாஸ்தா போன்ற உணவுகள் எல்லோருக்கும் பிடிக்கும் உணவாக இருக்கிறது. இருப்பினும் இதன் கலோரிகள் மிக மிக அதிகம். ஒரு ஸ்பைரைலைசர் உதவியுடன் சுரைக்காய் போன்ற காய்கறியிலிருந்து பாஸ்தாவை உருவாக்கி அவற்றை நூடுல்ஸ் வடிவத்தில் ஸ்குவாஷ் செய்யவும். இதில் கலோரிகளையும் சேர்ப்பது பாஸ்தாவின் கலோரிகளின் எண்ணிக்கையை பல மடங்காக குறைக்கிறது. இந்த உணவு உங்களுக்கு மனநிறைவை தரும்.

​கெட்டில்

 

நம்மில் பலர் தாகத்தை உணரும் போதெல்லாம் கலோரி அதிகமான சோடா பானங்களை நாடுகிறோம். ஒரு பாட்டில் சோடாவில் உள்ள சர்க்கரை அதை ஆரோக்கியமற்ற பானங்களில் ஒன்றாக மாற்றுகிறது. எனவே ஆரோக்கியமான பானத்தை தேர்வு செய்வது கூட உங்க எடை இழப்பிற்கு மிகவும் முக்கியம். எனவே கெட்டில் போன்ற மின்சார கருவியை பயன்படுத்தி நீங்கள் எளிதாக தேநீர் போன்றவற்றை தயாரித்து குடித்து வரலாம்.

 

​பிளண்டர்

 

பிளண்டர் உங்களுக்கு எல்லா பொருட்களையும் அரைத்து எளிதாக ஜூஸ் எடுக்க உதவுகிறது. கீரையை இந்த மிக்ஸி சாரில் போட்டு வாழைப்பழம் போன்றவற்றை போட்டு நன்றாக அரையுங்கள். இதன் மூலம் ஆரோக்கியமான அத்தியாவசிய தேவைகளை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இந்த பிளண்டர் உங்க எடை இழப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *