கொரோனா அறிகுறி எப்போது வெளிப்படும்? யாரால் கோவிட் அதிகம் பரவும்?

கொரோனா அறிகுறி எப்போது வெளிப்படும்? யாரால் கோவிட் அதிகம் பரவும்?
104 / Post Views.

கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு உண்டானால் ஏற்படும் அறிகுறிகள் குறித்த சில முக்கிய தகவல்களை பார்ப்போம்.

ஒருவருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அந்த அறிகுறிகள் தென்பட சராசரியாக ஐந்து நாட்கள் ஆகும் என்று அமெரிக்காவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

காய்ச்சல், சளி, சுவாசக் கோளாறுகள் ஆகியவை கோவிட்-19 தொற்றின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் தொற்று ஏற்படும் தரவுகளைக் கொண்டு அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் இந்த ஆய்வை மேற்கொண்டது.

இதில் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஐந்தாவது நாள் அல்லது அதற்கு மிகவும் நெருக்கமான காலப்பகுதியில் அறிகுறிகள் வெளிப்பட தொடங்குகிறது என்று தெரியவந்துள்ளது.

தொடர்ந்து 12 நாட்கள் வரையிலும் கூட ஒருவருக்கு அறிகுறிகள் தென்படாமல் இருக்கலாம்.

அப்படி 12வது நாள் வரை அறிகுறிகள் தென்படாதவருக்கு, அதற்குப் பின்னர் கொரோனா அறிகுறிகள் தெரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை.

ஆனாலும் அவர்கள் மூலமாக பிறருக்கு கோவிட்-19 தொற்று பரவுவதற்கான சாத்தியமுண்டு.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் செய்த ஆய்வுக்கு தலைமை வகித்த பேராசிரியர் ஜஸ்டின் லெஸ்லர் தங்கள் ஆய்வு 181 நபர்களின் தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் கோவிட்-19 தொற்று ஏற்பட்டு உள்ளவர்களில் எத்தனை பேருக்கு அறிகுறிகள் உண்டாகும், எத்தனை பேருக்கு அறிகுறிகள் தென்படாமல் போகும் என்பது குறித்து இந்த ஆய்வு எதையும் பரிசோதிக்கவில்லை.

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *