வெரிகோஸ் வெயின் பிரச்சினை இருக்கறவங்க என்ன செய்யணும்?… என்னலாம் செய்யக்கூடாது…

வெரிகோஸ் வெயின் பிரச்சினை இருக்கறவங்க என்ன செய்யணும்?… என்னலாம் செய்யக்கூடாது…
188 / Post Views.

நீங்கள் உங்கள் கால்களில் வீங்கி பருத்த நரம்புகள் ஏற்பட்டு அதனால் வலிக்கு உள்ளாகி உள்ளீர்களா?. ஆம் எனில் இந்த கட்டுரை உங்களுக்கு உதவ கூடும். இதற்கு ஆங்கிலத்தில் வரிகோஸ் வெயின்ஸ் என பெயராகும். இது பொதுவாக பலருக்கு இருக்கிற விஷயமாகும்.

வீங்கி பருத்த வலி ஏற்படுத்தும் நரம்புகள் இரத்த நாளங்களில் குறிப்பாக அடிவயிற்றுக்கு கீழ் இரத்தம் குவிவதற்கு வழி வகுக்கிறது. இதை கண்டு கொள்ளாமல் விட்டால் அதனால் இரத்தப்போக்கு, புண்கள் மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் இவை விரைவாக குணமடையாது. எனவே மும்பையில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் அலோசகரான மருத்துவர் பிரதீப் ஷா, வீங்கி பருத்த வலிக்கிற நரம்புகளை கொண்டவர்களுக்கு சில உதவிக்குறிப்புகளை கூறியுள்ளார். இந்த வீங்கிய நரம்பு பிரச்சனையை கொண்டவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முதலில் பார்ப்போம்.

செய்ய வேண்டியவை:

உங்களது வேலை நேரங்களின் பொழுது குறிப்பிட்ட நேரத்திற்கு (ஒவ்வொரு 2 முதல் 3 மணி நேரத்திற்கு) ஒரு முறை இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள். அந்த சமயத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு உங்கள் காலை மேஜையின் மேல் வைத்துக் கொள்ளுங்கள்.

சாக்ஸ்

காலுறைகள் இரத்த ஓட்டத்திற்கு உதவுவதால் அவற்றை அணிவதை மறவாதீர்கள். வீரீயோசிட்டி என்ற வீக்கத்தை தவிர்க்க இது உதவுகிறது. ஏனெனில் நீங்கள் பருத்த நரம்புகளால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் உங்கள் உடலில் கொலாஜன் திசு பலவீனமாகவும், மீள் தன்மையுடனும் இருக்கிறது என அர்த்தமாகும். இதனால் அதிக இரத்தப்போக்கு நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது.

எனவே உடலில் சரியான ரத்த ஓட்டம் இருப்பதை உறுதி செய்வது மிக முக்கியமாகும். எனவே முடிந்த அளவு தினமும் காலுறைகளை அணியுங்கள்.

உடற்பயிற்சி

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது என்பது நரம்பு வீக்கத்தை சரி செய்ய உதவாது. ஆனால் இது எடையை குறைக்கவும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் உதவுகிறது. ஏனெனில் அதிக எடை நமது கால்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே இதனால் வீங்கிய நரம்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு காயம், இரத்தபோக்கு மற்றும் தொற்று நோய்கள் போன்ற உடல் நல பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே வீங்கிய வலிக்கும் நரம்புகளை கொண்டவர்கள் உடல் எடையை குறைப்பதும் முக்கியமான விஷயமாகும்.

​​வாக்கிங்

நடைபயிற்சி செய்பவர்கள் கால்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க பிளாட் அல்லது குறைந்த ஹீல் கொண்ட ஷூக்களை பயன்படுத்தலாம். மேலும் நீங்கள் ஹை ஹூல் ஷூக்களை அணிவதை தவிர்க்கவும். ஏனெனில் இது வீக்கத்திற்கு மேலும் சிரமத்தை உருவாக்கும். இதனால் உங்கள் நிலை மேலும் மோசமாகும்.

​செய்ய கூடாதவை:

நிற்கக் கூடாது

வீங்கிய வலிக்கும் நரம்புகளை கொண்டவர்கள் ஒரே இடத்தில் அதிக நேரத்திற்கு நிற்க கூடாது. ஏனெனில் இது ரத்த ஓட்டத்தில் பிரச்சனையை உருவாக்கும். மேலும் இது இரத்த ஓட்டத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்தும். இது உங்களுக்கு ஏற்படும் வலியை மேலும் மோசமாக்கும். போக்குவரத்து போலீஸ் மற்றும் வரவேற்பாளர் போன்ற பணிகளில் அதிக நேரம் நிற்பவர்களுக்கும் இது பொருந்தும்.

ஒருவேளை நீங்கள் வெகுநேரம் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் உங்கள் மொத்த எடையையும் ஒரு காலுக்கு மாற்றவும். பின்னர் சில நிமிடங்கள் கழித்து அனைத்து எடையையும் மற்ற காலுக்கு மாற்றவும். அதாவது நமது உடலின் மொத்த எடையையும் நமது கால்களே தாங்குகிறது. மேலே குறிப்பிட்ட செய்கையை செய்வதன் மூலம் ஒரு கால் பாரத்தை தாங்கும்போது மற்றொரு கால் ஓய்வாக இருக்கும்.

​கால்களை நீட்டி உட்காருங்கள்

கால்களை மடக்கி உட்கார வேண்டாம். ஏனெனில் கால்களை மடக்கும்போது அது இரத்த ஓட்டத்தை தடை செய்யும். இதனால் உங்கள் நிலை மேலும் மோசமாகும். அதற்கு பதிலாக ஓய்வெடுக்கும் சமயத்தில் உங்கள் கால்களை தலையனை மீதோ அல்லது உயரமான இடத்திலோ வைத்துக் கொள்ளலாம். இப்படி செய்வது மூலம் இரத்த ஓட்டத்தில் மேம்பாடு ஏற்படும்.

​உட்கார்ந்தே இருத்தல்

நீண்ட நேரத்திற்கு இடைவெளிகளே இல்லாமல் ஒரே இடத்தில் உட்கார வேண்டாம். வீங்கி வலியை ஏற்படுத்தும் பருத்த நரம்புகளில் இதனால் பாதிப்பு ஏற்படும். ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறையும் அதாவது 30 முதல் 45 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு குறுகிய நடைபயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

​மருத்துவ ஆலோசனை

மருத்துவரிடம் ஆலோசிக்காமல் சொந்தமாக வைத்தியம் எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். இயற்கை வைத்தியங்கள் போன்றவற்றை தேர்வு செய்ய வேண்டாம். இரத்த குழாய்கள் பலவீனமடைவதாலும் அவை இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவதாலும் பருத்த வலியை ஏற்படுத்தும் நரம்புகள் ஏற்படுகின்றன. எனவே இந்த நிலைக்கு சரியான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

எனவே மூலிகை வைத்தியத்தை பயன்படுத்துவதன் மூலம் இந்த நோயை சரி செய்ய முடியாது. ஆனால் சில வீட்டு வைத்தியங்கள் இதனால் ஏற்படும் வலிக்கு மட்டும் நிவாரணம் அளிக்கின்றன.

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *