பறக்கும் கார்கள் விரைவில் அறிமுகம் – உலகமே மாறப் போகிறதா?

பறக்கும் கார்கள் விரைவில் அறிமுகம் – உலகமே மாறப் போகிறதா?
133 / Post Views.

பறக்கும் கார்கள் எதிர்காலத்துக்கானவை ஆக தோன்றலாம். ஆனால், வணிக ரீதியிலான ஜெட் வாகனங்கள் முதல் தனிப்பட்ட ஏர்டாக்சி வரையில், எல்லாம் ஏற்கெனவே வந்து விட்டன. நாம் பயணிப்பது, வேலை செய்வது மற்றும் வாழ்வதில் அவை எந்த வகையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை இங்கே பார்க்கலாம்.

2019ல் லாஸ் ஏஞ்சலஸ் கற்பனையில் எப்படியிருக்கும் என்ற நிஜமான பிளேடு ரன்னர்ஸ் உருவான போது, “ஸ்கிம்மர்கள்” நிறைந்த விண்ணில் இருந்து அமில மழை பெய்யும் நகராக இருந்தது. விண்ணில் நெடுஞ்சாலையில் பறக்கும் கார்கள் பயணம் அதிகமாக இருந்தது.

1982ல் அந்தப் படம் வந்ததில் இருந்து, ஹாலிவுட் உலகமே ஊகித்திராத அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. செல்பி ஸ்டிக்குகள், கொலை செய்யும் டிரோன்கள், ஹேஷ்டேக் அரசியல் என மாறிவிட்டது. ஆனாலும் தலைக்கு மேலே செல்லும் கார்கள் என்பது இன்னும் கற்பனையாகவே இருந்து வருகிறது. அறிவியல் கற்பனை நாவல்கள் மற்றும் தீம் பார்க் பயணங்களில் மட்டுமே அது இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

உண்மையில், பறக்கும் கார்கள் இருக்கின்றன – அவை நமது பயணம், வேலை மற்றும் வாழ்வை வரக் கூடிய காலங்களில் மாற்றுவதாக இருக்கப் போகின்றன.

பேட்டரி சக்தியின் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், தனிப்பட்ட பறக்கும் வாகனங்களை உருவாக்கும் முயற்சிகளை மெட்டீரியல் அறிவியல் மற்றும் கம்ப்யூட்டர் சிமுலேசன் ஆகியவை விரைவுபடுத்தியுள்ளன.

இவற்றை தனித்து இயக்கும் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. மின்சார கிளைடர்கள் முதல், இறக்கை பொருத்திய வடிவமைப்பு மற்றும் 4 விசிறிகள் கொண்ட குவாட்காப்டர் டிரோன்கள் வரை தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது.

1982ல் வெளியான பிளேடு ரன்னர்ஸ் படத்தில் காட்டப்பட்ட பறக்கும் கார்கள் எதிர்கால கற்பனையாக இருக்கலாம் - ஆனால் இப்போது அப்படியல்ல.
 
படக்குறிப்பு,

1982ல் வெளியான பிளேடு ரன்னர்ஸ் படத்தில் காட்டப்பட்ட பறக்கும் கார்கள் எதிர்கால கற்பனையாக இருக்கலாம் – ஆனால் இப்போது அப்படியல்ல.

 

பிளேடு ரன்னர்ஸ் படத்தில் இருந்த கற்பனை கார் போன்றதாக இந்த விமான வடிவமைப்பு இருக்காது. ஆனால், அவை உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. வணிக ரீதியிலான விமானத்தைவிட மிகவும் சிறியதாக, செங்குத்தாக மேலே எழும்பிச் செல்லவும் தரையிறங்கவும் உதவுவதற்கு, இறக்கைகளுக்குப் பதிலாக ரோட்டார்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதாக அது இருக்கும். உதாரணமாக, ரோட்டார்கள் நீண்ட தொலைவுகளுக்கு பறந்து செல்லும் செயல்திறனை அளிக்கும். பறக்கும்போது சப்தம் ஏற்படுவதைக் குறைக்க மல்டிரோட்டார்கள் வடிவமைக்கப் படுகின்றன.

தனி நபர்களின் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும் வகையில் இந்த வாகனங்கள் வடிவமைக்கப்படுகின்றன என்பது மிகவும் முக்கியமான விஷயம். குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் பயண நேரத்தை இது குறைக்கும்.

இப்போதைக்கு நகர்ப்புற தன்னாட்சி விமான சந்தையானது ஒழுங்குமுறைகள் இல்லாமல் உள்ளது.வணிக ரீதியில் ஜெட் வாகனங்கள், பறக்கும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் தனிப்பட்ட ஏர் டாக்சிகளை உருவாக்குவதில் டஜன் கணக்கிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

வேகமாக வளர்ந்து வரும் இத் துறையில் விமான தயாரிப்பு நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள், ஊபர் போன்ற வாடகை வாகன நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இத்துறையில் 2040 ஆம் ஆண்டு வாக்கில் 1.5 டிரில்லியன் டாலர் அளவுக்கு புழக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கிடையில், இந்தப் புதிய போக்குவரத்து சூழலை நிர்வகிக்கும் நோக்கில் விமான போக்குவரத்துத் துறை புதிய கொள்கைகள் மற்றும் பாதுகாப்பு தரநிலைகளை அறிவித்துள்ளது.

ஜாவோ டெலி என்பவர் தாமே உருவாக்கிய பறக்கும் மோட்டார் சைக்கிளில் சீனாவில் 2019-ல் பரிசோதனைக்காக பறந்து பார்க்கிறார்
 
படக்குறிப்பு,

ஜாவோ டெலி என்பவர் தாமே உருவாக்கிய பறக்கும் மோட்டார் சைக்கிளில் சீனாவில் 2019-ல் பரிசோதனைக்காக பறந்து பார்க்கிறார்

 

ஜெர்மனியைச் சேர்ந்த வோலோகாப்டர் நிறுவனம், முதன்முதலில் வணிக ரீதியாக உரிமம் பெற்ற மின்சார ஏர் டாக்சியை விற்பனைக்குக் கொண்டு வந்தது. அது பைலட் இல்லாமல் இயங்கும் வாகனமாக இருந்தது.

“அது ஊபர் பிளாக் போன்றதாக அல்லது வேறு எந்த ப்ரீமியம் சர்வீஸ் போன்றதாக இருக்கும்” என்று வோலோகாப்டர் நிறுவனத்தில் மக்கள் விவகாரங்கள் பிரிவு துணைத் தலைவர் பேபியன் நெஸ்ட்மன் தெரிவித்தார்.

சில மாற்றங்கள் இருந்தாலும், அவர் சொன்னது போலவே அது இருந்தது. ஆரம்பத்தில் வோலோசிட்டி என்ற அந்த வாகனத்தில் ஒரு பயணிக்கு மட்டுமே இருக்கை இருந்தது. அதனால், ஆரம்பத்தில் பயணத்துக்கான செலவு அதிகமாக இருந்தது. ஆனால் முழுமையாக தானாக இயங்கக் கூடிய, மின்சாரத்தில் இயங்குவதாக, இறக்கைகள் அல்லாமல் 9 பேட்டரிகள் மூலம் இயங்குவதாக, வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் பயணிகளை அழைத்துச் செல்லக் கூடிய வகையில் வாகனங்களை வடிவமைப்பு மக்களின் நம்பிக்கையைப் பெறுவோம் என்று வோலோகாப்டர் நிறுவனம் நம்பிக்கை கொண்டிருக்கிறது.

பெரிய நகரங்களில், இந்த வாகனங்கள் செங்குத்தாக கிளம்பிச் செல்லவும், செங்குத்தாக இறங்கவும் விமான தளங்கள் அமைக்கப்படும். வோலோசிட்டியின் வணிக ரீதியிலான முதலாவது வான்வழி பயணம் 2022-ல் தொடங்கும் என திட்டமிடப் பட்டுள்ளது.

அப்போது முதலாவது பயணத்துக்கு ஒரு டிக்கெட்டுக்கு 350 டாலர் வரை செலவாகும். ஆனால், அந்தச் செலவைக் குறைக்க வேண்டும் என்பது தான் நிறுவனத்தின் நோக்கம் என்று நெஸ்ட்மன் தெரிவித்தார். ஊபர் பிளாக் சேவையுடன் போட்டியிடக் கூடிய அளவுக்கு இந்த கட்டணத்தைக் குறைப்பதே நோக்கம் என்கிறார் அவர்.

“பணக்காரர்களுக்கான பொம்மையாக இது இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. நகரத்தில் வாழும் யாருக்கும் கட்டுபடியாகக் கூடிய, ஒருங்கிணைந்த வசதியாக இதை உருவாக்க விரும்புகிறோம்” என்று அவர் கூறினார். “நடப்பதற்கு, வாகனத்தில் செல்ல, சைக்கிளில் செல்ல அல்லது வான்வழியில் செல்ல எல்லோருக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

2019 அக்டோபரில் சிங்கப்பூரில் செயல்திறனை வெளிக்காட்டிய வோலோகாப்டர் ஏர் டாக்சி

வணிக ரீதியிலான பயன்பாட்டை நோக்கமாகக் கொண்ட வடிவமைப்பை உருவாக்க, ஏற்கெனவே கார் தயாரிப்பில் உள்ள நிறுவனங்களுடன், சில நிறுவனங்கள் கூட்டு சேர்ந்துள்ளன. உதாரணமாக, ஜப்பானில் ஸ்கை டிரைவ் நிறுவனம், பரிசோதனை முறையில் பறக்கும் வாகனத்தை இயக்க டொயோட்டா நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. முழுக்க மின்சாரத்தால் இயங்கும் அந்த ஏர் டாக்சி, செங்குத்தாக மேலே எழும்பிச் செல்தல் மற்றும் தரையிறங்குதல் வசதியுள்ள உலகின் மிகச் சிறிய மின்சார வாகனமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

கடந்த கோடையில், SD-03 என்ற வாகனத்தை, அந்த நிறுவனம் ஒரு பைலட் கட்டுப்பாட்டில் விமான தளத்தைச் சுற்றி பல நிமிட நேரங்களுக்கு வெற்றிகரமாக பறக்கவைத்துக் காட்டியது.

“மக்களின் தேவைகள் அதிகரித்துவிட்டன. ஆனால் போக்குவரத்து பிரச்சினைக்கு இன்னும் தெளிவான தீர்வு கிடைக்கவில்லை. மின்சார கார்கள் அல்லது வேகமாக செல்லும் டி.ஜி.வி. ரயில் [பிரான்ஸில் இன்டர்சிட்டியாக ஓடக்கூடியது] போன்ற மாற்று போக்குவரத்து வசதிகள் மூலமாகவும் இதற்குத் தீர்வு ஏற்படவில்லை” என்று ஸ்கைடிரைவ் நிறுவனத்தின் பிரதிநிதி டக்காகோ வாடா கூறியுள்ளார்.

“மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டும், தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொண்டும் ஸ்கைடிரைவ் நிறுவனத்தின் பயண வாகனங்கள் உருவாக்கப்படுகின்றன என்று நீங்கள் சொல்ல முடியும்” என்கிறார் அவர்.

சொல்லப்போனால், இந்தத் தொழில்நுட்பங்கள் காரணமாகத்தான் நிறைய விமான வடிவமைப்பு நிறுவனங்கள், பறக்கும் நேரத்தை அதிகரிக்க முடிகிறது. லில்லியம், விஸ்க், ஜோபி ஏவியேசன், பெல் போன்ற நிறுவனங்களும், இன்னும் பல நிறுவனங்களும் மின்சார உந்துசக்தி போன்ற புதுமை சிந்தனைகளை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

இதனால் சப்தம் குறையும், பேட்டரி சக்தி செலவு குறையும், பயண தொலைவு அதிகரிக்கும். தொடக்க நிலையில் இருக்கும் ஒரு தொழில் துறைக்கு, செங்குத்தாக எழும்பிச் செல்தல் மற்றும் தரையிறங்குதல் (வி.டி.ஓ.எல்.) வடிவமைப்புகளுக்கு அல்லது எவ்வளவு உயரத்தை அடைய வேண்டும் என்பதற்கு தடங்கல்கள் கிடையாது.

பிரிட்டனைச் சேர்ந்த கிராவிட்டி இன்டஸ்ட்ரீஸ் என்ற ஏரோநாட்டிகல் நிறுவனம், உடலில் அணிந்து கொள்ளக் கூடிய வகையில் 1,050 குதிரை சக்தி திறன் கொண்ட ஜெட்பேக் ஒன்றை உருவாக்கியுள்ளது. “அது கொஞ்சம் பார்முலா ஒன் கார் போன்றதாக இருக்கும்” என்று நிறுவனத்தை உருவாக்கியவரும், தலைமை பரிசோதனை பைலட்டுமான ரிச்சர்ட் பிரவ்னிங் தெரிவித்தார்.

“இந்த ஜெட்சூட் விசேஷமான சாதனமாக இருக்கும். இப்போதைக்கு தொழில்முறை வர்த்தகர்களும், ராணுவத்தினரும் பயன்படுத்தலாம்” என்று அவர் கூறுகிறார். தன் ஸ்டூடியோவில் உள்ள பேட்மேன் போன்ற உலோகப் பகுதிகளை அவர் காட்டினார்.

“ஒரு காலத்தில் இந்த ஜெட்பேக் பறக்கும் சூப்பர் ஹீரோவாக இருக்கப் போகிறது. துணை மருத்துவ அலுவலர்கள் எங்கே செல்ல வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதை இதை வைத்து முடிவு செய்வார்கள்” என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

2020 செப்டம்பரில், கிராவிட்டி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரிச்சர்ட் பிரவ்னிங், தமது நிறுவனத்தின் பறக்கும் பேக்கின் செயல்பாட்டை லேக் மாவட்டத்தில் செய்து காட்டினார்
 
படக்குறிப்பு,

2020 செப்டம்பரில், கிராவிட்டி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரிச்சர்ட் பிரவ்னிங், தமது நிறுவனத்தின் பறக்கும் பேக்கின் செயல்பாட்டை லேக் மாவட்டத்தில் செய்து காட்டினார்

 

இது வானில் பார்த்து ரசிப்பதற்கானதாக மட்டும் கிடையாது. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் இதைப் பயன்படுத்த கிராவிட்டி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் கிரேட் நார்த் ஏர் ஆம்புலன்ஸ் சர்வீஸ் நிறுவனம் சமீபத்தில் கை கோர்த்துள்ளது.

இங்கிலாந்தில் லேக் மாவட்டத்தில் லாங்டேல் பைக்ஸ் என்ற பள்ளத்தாக்கின் கீழே இருந்து செங்குத்தான பாறைகள் நிறைந்த பகுதியில் தனது ஜெட்பேக் அணிந்து பிரெளனிங் பறந்து காட்டினார். நடந்து போனால் சிரமப்பட்டு 25 நிமிடங்களில் அதை அடையலாம்.

இதில் பறந்து செல்ல வெறும் 90 விநாடிகள் மட்டுமே தேவைப்பட்டது. எளிதில் அணுக முடியாத பகுதிகளுக்கு, அதிமுக்கியமான மருத்துவ வசதிகளை கொண்டு போய் சேர்ப்பதில் ஜெட்பேக்குகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நிரூபிப்பதாக அவருடைய பரிசோதனைக்கான பறக்கும் நிகழ்ச்சி அமைந்திருந்தது.

“காற்றில் பயணம் என்பது என்ற கனவு நீண்டகாலமாகவே இருந்து வந்தது” என்று கலிபோர்னியாவில் சிலிகான் பள்ளத்தாக்கில் ஏமெஸ் ஆராய்ச்சி மையத்தில் உள்ள நாசாவின் ஏரோநாட்டிகல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் பரிமல் கோபர்டேகர் தெரிவித்தார்.

“இப்போதைய விமான வசதியால் பொருட்கள் மற்றும் சரக்குகளை கொண்டு போய் சேர்க்க முடியாத பகுதிகளுக்கு சேவை அளிப்பதற்கு, உரிய வாகனங்களை வடிவமைப்பதற்கான பலமான வாய்ப்பு உள்ளது” என்று அவர் கூறினார்.

வி.டி.ஓ.எல்.கள் உள்ளிட்ட தானே இயங்கும் மற்றும் நவீன வான்வழி பயணத்தில் பறக்கும் நுட்பங்களை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பொறுப்பில் கோபர்டேகர் இருக்கிறார். இதில் உள்ள நுட்பங்களைக் கருத்தில் கொண்டு, பல அம்சங்களை நாசா குழுவினர் பரிசோதனை செய்து, தீர்வு காண வேண்டும்.

விமானம், வான்வெளி பாதை, கட்டமைப்பு, சமுதாய ஒருங்கிணைப்பு, வானிலை அமைப்புகள், ஜி.பி.எஸ்., சப்தம் தரநிலைகள், பராமரிப்பு, வழங்கல் சங்கிலித் தொடர், பாகங்கள் வாங்குதல் உள்ளிட்ட விஷயங்கள் இதில் ஆய்வு செய்யப்பட வேண்டும். வான்வழி பயணத்தை பகிர்ந்து கொள்ளும் நடைமுறை சாத்தியமாகும்போது, எல்லா சமயங்களிலும் ஏற்படக் கூடியதாக இல்லாவிட்டாலும், நடப்பதற்கு வாய்ப்புள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை உருவாக்க வேண்டியுள்ளது.

SD-03 என்ற மனிதரால் இயக்கப்படும் பறக்கும் கார், 2020 ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் பரிசோதனை முறையில் இயக்கி பார்க்கப்பட்டது
 
படக்குறிப்பு,

SD-03 என்ற மனிதரால் இயக்கப்படும் பறக்கும் கார், 2020 ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் பரிசோதனை முறையில் இயக்கி பார்க்கப்பட்டது

 

“பாதையில் இயக்க சட்டபூர்வமானதாக” பறப்பதற்குப் பாதுகாப்பானதாக, மக்கள் பறந்து பயணிக்க விரும்பக் கூடியதாக வாகனத்தை உருவாக்க கற்பனைத் திறன் அதிகம் தேவைப்படுகிறது. வி.டி.ஓ.எல். பயணத்தை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்பதாக அல்லாமல், மற்ற வகையிலான போக்குவரத்தைவிட சௌகர்யமானது, பாதுகாப்பானது என்று மக்களை ஏற்கும்படி செய்ய வேண்டும்.

“தீவிர பரிசோதனைகள் நடத்தாமல் வணிக ரீதியிலான சேவைகளை இயக்கிவிட முடியாது” என்று நெஸ்ட்மன் கூறுகிறார். வோலோகாப்டரின் மக்கள் விழிப்புணர்வு முன்முயற்சிகளை அவர் செயல்படுத்தி வருகிறார். “இந்த இயந்திரங்களுக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதும் ஒரு பகுதியாக இருக்கிறது” என்கிறார் அவர்.

செங்குத்தான செயல்பாட்டுக்கு உகந்த தளங்கள் அமைத்தல், மின்சார சக்தி வசதியுடன் கூடிய நிறுத்தும் இட வசதி அல்லது மென்பொருள் மூலம் இயங்கும் பின்வரிசை செயல்பாட்டு வசதி ஆகியவை தேவைப்படுகிந்றன. உத்தேசிக்கப்பட்டுள்ள வாகனங்களை அதிக எண்ணிக்கையில் இயக்கும்போது, ஏறத்தாழ முழுமையாக தானே இயங்கும் வகையில் செயல்படுத்துவதற்கு முறைமை ஏற்பாடுகல் தேவைப்படும். இப்போது நாம் இயக்கும் வணிக ரீதியிலான வாகனங்களை டவரில் உள்ள மனிதர்கள் கட்டுப்படுத்துகிறார்கள்.

எதிர்கால பறக்கும் இயந்திரங்கள் யூ.டி.எம். என்ற ஆளில்லா போக்குவரத்து மேலாண்மை முறையால் கட்டுப்படுத்தப்படும். குறிப்பிட்ட பாதையில் மற்ற வாகனங்களின் பயணம் பற்றிய முழு தகவல்களும் வி.டி.ஓ.எல். முறைமைக்கு இருந்தாக வேண்டும்.

நிரூபிக்கப்பட்ட செயல்திறன் கொண்ட, முழுக்க தானே இயங்கும் செங்குத்தான பயண வசதியுள்ள இந்த வாகனம் மக்களுக்கு சிரமத்தைக் குறைப்பதாக இருக்கும். ஆனால் அதிக எண்ணிக்கையில் இந்த வாகனங்கள் பறக்கும் போது, புதிய சவால்கள் நிறைய உருவாகும். வாகனங்கள் செல்வதற்கான பாதைகள் அல்லது தரையில் நிறுத்துவதற்கான தளங்கள் வி.டி.ஓ.எல்.-க்கு தேவைப்படும்.

அதற்கு தனிப்பட்ட வழித்தடங்களும், ஸ்கை-ஹார்பர்களும் தேவைப்படும். ஆனால் தரையில் செல்லும் கார்களின் எண்ணிக்கையை குறைக்க ஏர்டாக்சிகள் உதவலாம். பயண நேரத்தை துல்லியமாக அமைக்கலாம். ஆனால், அவற்றின் எண்ணிக்கை வானில் அதிகரிக்கும்போது – கட்டடங்கள், பறவைகள், டெலிவரி டிரோன்கள், விமானங்கள் என பலவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தடைகளில் சிக்கிக் கொள்ளாமல் தவிர்க்க பைலட்கள் தேவைப்படும் – குறைந்தபட்சம் வி.டி.ஓ.எல். வாகனங்களுக்கு பைலட்கள் தேவைப்படும். “ஸ்கைவே” என்ற நடைமுறைக்கு, தனிப்பட்ட சட்டங்களை உருவாக்க வேண்டியிருக்கும்.

கூடுதலாக, அதில் பயணிப்பவர்களுக்கோ அல்லது அதன் கீழே தரையில் இருப்பவர்களுக்கோ எந்த ஆபத்தும் ஏற்படாது என்பதை வாகன தயாரிப்பாளர்கள், சேவைகளை இயக்குபவர்கள் உறுதி செய்தாக வேண்டும். அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகளின் விதிகளைப் பின்பற்றி, கோபர்டேகரும், நாசாவின் குழுவினரும் “நகர்ப்புற வான்வழி மொபிலிட்டி மெச்சூரிட்டி லெவல் ஸ்கேல்” என்ற வரைமுறைகளை உருவாக்கியுள்ளன.

வான்வழி பயண வாகனம், வான்பாதை மற்றும் இதர வசதிகளை ஒன்று முதல் ஆறு புள்ளிகள் வரை தரநிலைப் படுத்துவதாக இது இருக்கிறது. பைலட் இயக்கும் காக்பிட் செயல்பாடுகளை எளிமையாக்கும் முறைகளை அவர்கள் உருவாக்கி வருகின்றனர்.

தானே இயங்குதல் மற்றும் அவசர சூழ்நிலைகளைக் கையாள்வதற்கான அம்சங்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. வானிலை மோசமாக மாறினால் வி.டி.ஓ.எல். எப்படி கையாள வேண்டும், பறவை தாக்கினால் அல்லது திடீரென ஜெட்பேக் குறுக்கீடு ஏற்பட்டால் எப்படி செயல்பட வேண்டும் என்ற அம்சங்கள் குறித்து அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.

ஊபர் எலிவேட்டின் நகர்ப்புற வான்வழி பயண சேவைக்காக வடிவமைக்கப்பட்ட ஹுண்டாய் S-A 1 வாகனம் 2020 ஜனவரியில் காட்சிக்கு வைக்கப்பட்டது
 
படக்குறிப்பு,

ஊபர் எலிவேட்டின் நகர்ப்புற வான்வழி பயண சேவைக்காக வடிவமைக்கப்பட்ட ஹுண்டாய் S-A 1 வாகனம் 2020 ஜனவரியில் காட்சிக்கு வைக்கப்பட்டது

 

இதுபோன்ற வழிகாட்டுதல்கள் தேவை என்பது ஏற்கெனவே உணரப்பட்டுள்ளது: லாஸ் ஏஞ்சல்ஸில் லாக்ஸ் விமான நிலையம் அருகே வணிக ரீதியிலான விமானம் 2020 அக்டோபரில் சென்றபோது, 6,000 அடி உயரத்தில் ஜெட்பேக்கை பார்த்தனர் – மோதக் கூடிய மோசமான அபாயகட்டமான உயரத்தில் அது நிகழ்ந்தது.

வி.டி.ஓ.எல்.களுக்கான தொழில்நுணுக்க வரையறைகளை ஐரோப்பிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஏஜென்சி (ஈ.ஏ.எஸ்.ஏ.) உருவாக்கியுள்ளது. அதற்கு எப்படி சான்றளிப்பது என்பது பற்றி இந்த ஏஜென்சி இன்னும் முடிவு செய்யவில்லை. பறக்கும் கார்களின் தனித்துவமான செயல்பாடுகள், அவசர காலத்தில் வெளியேறுவதற்கான வழி உள்ளிட்ட வானில் பறப்பதற்கான தகுதிநிலைகள், மின்னல் தாக்காமல் பாதுகாப்பு, தரையிறங்குதல் கியர் சிஸ்டங்கள், அழுத்தம் நிறைந்த கேபின்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் விதிகள் வரையறுக்கப் பட்டுள்ளன.

“விமானங்கள், ரோட்டோகிராப்ட் அல்லது இரண்டிற்குமான வடிவமைப்பு தனித்துவங்கள் இருந்தாலும், இந்த வாகனங்களை வழக்கமான விமானமாக வகைப்படுத்துவதா அல்லது ரோட்டோகிராப்ட் என வகைப்படுத்துவதா என்பதில் ஈ.ஏ.எஸ்.ஏ. முடிவு எடுக்க முடியாமல் உள்ளது” என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. இறக்கைகள் பொருத்திய ஜெட்கள் அல்லது ஹெலிகாப்டர்களில் இருந்து வி.டி.ஓ.எல்.கள் எந்த வகையில் மாறுபட்டுள்ளன என்பதை அந்த அமைப்பால் முடிவு செய்ய முடியவில்லை.

வி.டி.ஓ.எல்.கள் வெற்றிகரமாக இயக்கப்படும்போது அரசாங்கம், தொழில்நுட்பம், போக்குவரத்து, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மக்களை அடைதல் என பல விஷயங்களில் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

திடீரென வி.டி.ஓ.எல். தயாரிப்பாளர்கள் அதிகரிக்க என்ன காரணம்? இ-காமர்ஸ் அதிகரிப்பு, பருவநிலை மாறுபாடு, குறுகிய காலத்தில் சேவையை நிறைவேற்றும் பொருளாதாரம், ஒருங்கிணைந்த வழங்கல் தொடர் போன்றவற்றால் தனிப்பட்ட வான்வழி பயணத்தில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இப்போதைய தொழில்நுட்ப வசதிகளால் இந்தத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாமல் போனதால், புதிய தேவைகள் எழுந்துள்ளன. நியூயார்க், ஹாங்காங், பெய்ஜிங் போன்ற நகரங்களில் தாங்கக் கூடிய அளவுக்கு வசதிகள் பெருகிவிட்ட நிலையில், நகர்ப்புற வாழ்க்கை, நீடித்து விரும்பக் கூடியதாக இல்லை. நமது இடைத்தொடர்பு பொருளாதாரத்தில், தொடர்ச்சியான நகர்வுகள் இருக்க வேண்டும் என்றாலும், நகர்ப்புற வாழ்வு உகந்ததாக இருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.

பயணித்தல், வாழ்க்கையில் இது மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது நமக்குத் தெரியும். “இப்போதைக்கு போக்குவரத்து வசதி அடிப்படையில் நிறைய மக்கள் வாழ்கிறார்கள். மக்கள் வாழும் இடங்களுக்கு செல்வதை வி.டி.ஓ.எல். சாத்தியமாக்கும். வாழ்க்கைக்கு ஏற்ற போக்குவரத்து சாதனமாக அது மாறும்” என்று கோபர்டேகர் கூறியுள்ளார்.

தொழில்கள் செய்ய மாவட்ட மத்தியப் பகுதிகளைத் தேட வேண்டிய அவசியம் இருக்காது. ஏர்டாக்சியில் செல்லக் கூடிய எல்லைக்குள் அலுவலர்கள் இருந்தால் போதும். வி.டி.ஓ.எல். வாகனம் வைத்துக் கொள்வது, ஒரு சைக்கிளை வைத்துக் கொள்வதைப் போல கட்டுபடியாகும் செலவில் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

“பெரிய அளவில் பார்த்தால், தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் நகரங்களில், பயணத்துக்கான வசதிகளின் தேவையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது” என்கிறார் நெட்ஸ்மன். “இதனால் கார்கள் விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தி திட்டமிடுவதால் வாழ்க்கையின் தரம் உயர்ந்துவிடாது என்பதால், மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

போக்குவரத்து தடங்கல் ஏற்படும் பகுதிகளில் கார்கள் காத்திருக்கின்றன, அவற்றில் இருந்து வெளியாகும் புகை சுற்றுச்சூழலை மாசுபடுத்தி ஆபத்தை அதிகரிக்கின்றன, நம் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்கின்றன. இதற்கிடையில் மின்சாரத்தில் இயங்கும் eVTOLS வாகனங்கள் புகை மாசு வெளிப்பாடுகளையும், டீசல் எரிபொருளை சார்ந்திருக்கும் நிலையையும் குறைக்கும்.

பறக்கும் கார்களின் எண்ணிக்கை அதிகரித்தால், இயல்பாகவே நமது நகரங்களின் அமைப்புகள் மாறும். உயரமான கட்டடங்களில் மேல் தளத்தில் கார்கள் இறங்கலாம். வானுயர்ந்த கட்டடங்களை இணைப்பதாக இந்த வாகனங்கள் இருக்கலாம்,

இதனால் தரையில் வாகன நெரிசல் குறையும். தரையில் கார்கள் குறைவதால் நெரிசல் குறையும், பூங்காங்கள் மற்றும் பசுமைவெளிகளை உருவாக்க நிறைய இடம் கிடைக்கும். “நீண்டகால ோக்கில் – 2045க்குப் பிறகு – தொழில்களம் பசுமைவெளிகளும் ஒருங்கிணைந்தவையாக இருக்கும்” என்று கோபர்டேகர் கூறுகிறார். “மெட்ரோ ரயில்கள் மற்றும் சாலைகளை நாம் அகற்றிவிட முடியாது என்றாலும், இந்த வாகனங்களின் வருகையால் அவற்றின் தேவை குறைந்துவிடும்” என்கிறார் அவர்.

எதிர்கால போக்குவரத்து, பணி சார்ந்த வாழ்க்கை, நுகர்வு, நகர்ப்புற வடிவமைப்பு ஆகியவற்றிலும், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் விஷயத்திலும் வி.டி.ஓ.எல்.-கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 2030 ஆம் ஆண்டு வாக்கில், மேகம் மூடியிருக்கும் தன்னுடைய அலுவலகத்திற்குச் செல்வதற்கு ஏர்டாக்சி வேண்டும் என்று கேட்டு ஒரு பட்டனை அழுத்தினால், சேவை கிடைக்கும் நிலை உருவாகும். அதன் பிறகு வரும் காலத்தில், தரைப் பகுதிக்கு நாம் செல்ல வேண்டிய அவசியமே கூட குறைந்து போகலாம், வாழ்வின் பெரும்பகுதி வான்பரப்பை சார்ந்தே இருந்துவிடலாம்.

“சாலையில் நீங்கள் ஒரு மைல் பயணம் செய்தால், ஒரு மைல் தூரத்தை தான் கடந்திருப்பீர்கள். வானில் ஒரு மைல் தூர வேகத்தில் பயணம் செய்தால் அதிக தூரத்தை விரைவாக எட்டலாம்” என்கிறார் கோபர்டேகர்.

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *