உங்களின் வெற்றிக்கான ஜப்பானிய ரகசியம்!

உங்களின் வெற்றிக்கான ஜப்பானிய ரகசியம்!
74 / Post Views.

நாளை எப்படியாவது அதிகாலையே எழுந்து விட வேண்டும் என்று உறுதியாக ஒர் தீர்மானம் எடுக்கிறோம். ஆனால் காலை பொழுது நாம் எதிர்பார்ப்பது போன்று எத்தனை அலாரம் அடித்தாலும் நம்மால் எழுந்து விட முடிவதில்லை.

உங்களின் வெற்றிக்கான ஜப்பானிய ரகசியம்!

இப்படி விழித்தெழுதலில் தொடங்கி நமது வாழ்க்கையில் பல்வேறுபட்ட விடயங்கள் இப்படியே தொடர்கிறது. இதனால் நல்உங்களின் வெற்றிக்கான ஜப்பானிய ரகசியம்!ல வெற்றி வாய்ப்புகளை எல்லாம் நாம் தவறவிட்டுகிறோம்.
நண்பர்களே இதற்கு ஜப்பானியர்கள் நல்ல ஒரு இரகசியத்தை தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதை நாமும் தெரிந்து கொண்டால் பல வெற்றிகளை நம்மாலும் படைக்க முடியும். அந்த இரகசியம் என்னவென்று இவ் பதிவில் பார்ப்போம்.

Hector Garcia, Albert Liebermann எனும் இரண்டு நண்பர்கள் ஒரு புத்தகத்தை எழுதுவதற்காக ஒரு கிராமத்திற்கு செல்கிறார்கள். அந்த கிராமத்தில் இருப்பவர்களுக்கு அந்த இரகசியம் தெரியும். ogimi என சொல்லப்படும் கிராமம் தான் அது. அந்த கிராமத்தில் அப்படி என்ன ஆச்சர்யம் இருக்கிறது?  அந்த கிராமத்தில் இருக்கக்கூடியவர்கள் உலகத்திலே அதிக வயதான மக்களை கொண்ட கிராமம் அது. அவர்கள் இலகுவாக , சர்வசாதாரணமாக 100 வயதை கடந்து விடுகிறார்கள். அவ் அதிக வயதிலும் அவர்களுடைய தேவைகளை அவர்களாகவே செய்துகொள்கிறார்கள். அவர்கள் தேக ஆரோக்கியத்துடன்,நல்ல மன வலிமையையோடும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த ஜப்பானிய இரகசியம் தெரிந்திருந்தது. இதை அறிந்துகொள்வதற்காக தான்  Hector Garcia, Albert Liebermann இருவரும் ogimi க்கு அவ் புத்தகத்தை எழுதி முடிப்பதற்காக சென்றார்கள். “The Japanese secret to a long and happy life” என்பதுதான் அவ் புத்தகம். அவர்கள் அறிந்து கொண்ட இரகசியம்தான் “Ikaigai” அதாவது வாழ்க்கைக்கான அர்த்தம்,வாழ்க்கைகான காரணம்.

நீங்கள் இந்த வாழ்க்கையை எதற்காக வாழ்கிறீர்கள்? நீங்கள் எதற்காக இருக்கின்றீர்கள்?? இதை அடிப்படையாகக் கொண்டதுதான் ikaigai. 

வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு விசயத்தில் ஆர்வம் அதிகமாக இருக்கும், அந்த காரியத்தில் ஈடுபடும் போது மட்டும் எவ்வளவு நேரம் செலவானது கூட தெரியாமல் இருக்கும். மணிக்கணக்கில் அதற்கு செலவு செய்வீர்கள். எந்த களைப்பையும் அடைய மாட்டீர்கள். அப்படிபட்ட ஒரு விடயத்தில் அதிக ஆர்வம் இருக்கும். இப்படி உங்கள் வாழ்க்கையில் ஆர்வத்தோடு தொடர்ந்து இயங்கச் செய்கிற , ஓட செய்கிற அந்த விடயத்தை பற்றி சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா??

  அங்கே தான் ikaigai ஒளிந்திருக்கிறது. மகிழ்ச்சி,தன்னிறைவு,வாழ்க்கையில் சமநிலை பேணுவது,குடும்பம்,தொழில் என்று பல்வேறு அம்சங்கள் இவை எல்லாம் வெவ்வேறானவை அல்ல everything is connected என்று சொல்கிறது ikaigai.  இந்த இரகசியத்தை உங்களது வாழ்க்கையோடு பயன்படுத்தக்கூடிய இரண்டு விடயங்களை உங்களுக்கு கூறுகிறேன்.

விழித்தெழுதல்
அதிகாலை 4 மணிக்கு அலாரம் வைத்திருப்போம் ஆனால் அந்த அலாரம் அடிக்கத் தொடங்கும் போதே பல தடவை அதை snooze செய்துவிட்டு தூங்குகிறோம். இது நமக்கு பழக்கமான ஒரு விடயம் தான். ஆனால் ஒரு சில சந்தர்ப்பங்களை வாழ்க்கையில் நினைத்துப்பாருங்கள்.

ஒரு விமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம், காலை 9 மணிக்கு விமானப்பயணம் 7 மணிக்கு விமானநிலையத்தில் இருக்க வேண்டும். அந்த இரவு நமக்கு தூக்கமே வராது, சில சமயங்களில் அதிகாலை 1 மணி 2 மணிக்கு தூங்க சென்று அதிகாலை 4 , 5 மணிக்கே எழுந்துவிடுவோம். காலை 7 மணிக்கு விமான நிலையத்தில் இருப்போம். எப்படியோ நிகழ்ந்து விடுகிறது. ஏனென்றால் அங்கே ஒரு காரணம் இருகின்றது. நாம் அதிகாலை எழுந்து விடுவதற்கு இது போன்ற ஒரு காரணத்தை ஒரு இலக்காக வைத்துக்கொண்டால் அதிகாலை 4 மணிக்கு விழித்தல் என்பது அவ்வளவு ஒரு கடினமான விடயமாக தெரியாது. இதே போன்று வாழ்க்கையிலும் ஒரு காரணம் நம்மை வெற்றி சிகரத்தை தொடுவதற்காக விழித்தெழ செய்யும்.

passion ஐ வாழ்வின் நோக்கத்தோடு இணைத்தல்

நாம் எவ்வாறான சூழலில் என்ன மாதிரியான சவால்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்தாலும் , பிடிக்காத ஒரு தொழிலை செய்தாலும் கூட நம்மால் வெற்றி பெற முடியும். நமக்குள்ளே ஒரு  passion  இருக்கும். அந்த passion சார்ந்த ஒரு தொழிலை நாம் செய்யாமல் போகலாம் உதாரணத்திற்கு அப்படியான சூழ்நிலையிலும் உங்களால் அந்த passion ஐ  விரும்பாத தொழிலிலும் ஈடுபடுத்த முடியும் என்று கற்று தருகின்றது இந்த இரகசியம்.

அதற்கு ஒரு நல்ல உதாரணம் Steve Jobs  இன் வாழ்க்கை. அவருக்கு பிடித்த துறை அவருடைய passion crafts manship(கைவினைத் திறன்) ஆகத்தான் இருந்தது. ஆனால் அவரை உலகம் இன்று தொழில்நுட்ப முன்னோடி என்று கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. அவர் என்ன செய்தார்?

அவருடைய ஆரம்ப காலங்களில் அவருக்கு பிடித்த கைவினைத்திறனில் இருந்த அவரின் ஆற்றலை கணனி, smartphone மூலமாக வெளிபடுத்தினார். தொழில் நுட்பத்தை ஒரு ஊடகமாக பயன்படுத்திக் கொண்டார். அவருடைய passion ஐ வெளிபடுத்துவதற்காக. இது நல்ல ஒரு உதாரணம். நமது வாழ்க்கையிலும் விரும்பாத அல்லது passion உடன் தொடர்பு படாத துறையில் இருந்தாலும் அந்த துறையில் எப்படி நமது passion ஐ தொடர்பு படுத்த முடியும் என்பதை நாம் பார்க்கலாம்.

வாழ்க்கையில் ஒரு காலம் ஒய்வில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேம், பின்பு ஒரு காலம் ஓய்வு பெற்று அப்படியே முடங்கிபோய் விடுகிறோம். இந்த ஓட்டமும் வேண்டாம், ஓய்வும் வேண்டாம் என்கிறது இந்த ஜப்பானிய ikaigai இரகசியம். எப்போதும் நமது மனதிற்கு பிடித்த நமது passion ஐ விருப்பத்தோடு ஆர்வத்தோடு எந்த வயதிலும் செய்து கொண்டே இருந்தால் எப்போதும் துடிப்பும், ஆரோக்கியமும்,நல்ல மனவலிமையும் நமது வாழ்க்கையில் இருக்கும். அது நல்ல மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரும் என்று நமக்கு இந்த ஜப்பானிய இரகசியம் கற்றுத் தருகிறது.

ஜப்பானின்  ogimi கிராமத்தில் இருக்கக்கூடிய 100 வயது கடந்த முதியவர்கள் நமது வாழ்க்கைக்கு இந்த நல்ல இரகசியத்தை கற்றுத் தருகிறார்கள். இந்த இரண்டு விடயத்தினூடாக நமது வாழ்க்கையிலும் நாம் பல்வேறு சாதனைகளை படைக்க முடியும்.

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *