பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுபவர் இவர்தான்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுபவர் இவர்தான்!
70 / Post Views.

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று ஒருவர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் ஞாயிறு அன்று பிக்பாஸ் வீட்டை விட்டு செல்வது யார் என்ற கேள்வி அனைத்து பார்வையாளர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்த வாரம் ஆரி, அனிதா, ஷிவானி, ஆஜித் மற்றும் கேப்ரில்லா ஆகிய ஐவர் எவிக்சன் பட்டியலில் இருக்கும் நிலையில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அனிதா, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த வாரம் முதல் நாளே ஆரியின் மீது மிக அதிகமாக அவர் கோபப்பட்டார் என்பதும் தனது கணவர் குறித்து பேசாதே என்று மிகவும் ஆத்திரமாக அவரிடம் கூறியது தான் அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டது என்றும், அதனால் அவருக்கு இந்த வாரம் மிகக்குறைவாக வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த வாரம் கடலைப்பருப்பு விவகாரத்தில் அனிதா கொஞ்சம் ஓவராகவே செயல்பட்டார் என்றும் கேப்டன் பாலாஜி பொறுமையாக எடுத்துக் கூறியும் அதை ஏற்றுக் கொள்ளாமல் தன்னிடம் தவறு இருக்கிறது என்பது உண்மைதான் என ஒப்புக்கொண்டும், ஆனால் அதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பிடிவாதமாக பேசியதும் பார்வையாளர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அனிதா பிக்பாஸ் வீட்டில் தனித்தன்மையுடன், எந்த குரூப்பிலும் சேராமல், மனதில் தோன்றியதை தைரியமாக கூறும் கேரக்டராக இருந்தார் என்பதும், குறிப்பாக தன்னை ஜெயிலுக்கு அனுப்பியது அநியாயம் என்று போராடியதும், அன்பு குரூப்பை சுக்குநூறாய் உடைத்ததும் அவருடைய பாசிட்டிவ்களாக பார்க்கப்படுகிறது

அனிதாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *