பெண்களே வழுக்கை மண்டை வராம இருக்கணுமா, முன்கூட்டியே இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க!

பெண்களே வழுக்கை மண்டை வராம இருக்கணுமா, முன்கூட்டியே இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க!
80 / Post Views.

ஆண்களை போன்று பெண்களும் வழுக்கையை எதிர்கொள்கிறார்கள். இதற்கான அறிகுறிகளை முன்னரே கண்டுவிட்டால் எளிதாக தடுத்துவிடலாம்.

வருடங்கள் ஏறும் போதெல்லாம் அழகு குறையுமே என்று நினைப்ப்பவர்கள் கண்டிப்பாக இருக்கும் அழகு குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும். அதிலும் கூந்தல் மீது எப்போதும் ஆசை கொண்டிருக்கும் நிலையில் கூந்தலை இழப்பது என்பது நிச்சயம் மன உளைச்சலை கொடுக்கவே செய்யும்.
50 வயதுக்குள் 40% பெண்கள் முடி உதிர்தல் அறிகுறிகளை அதிகம் கொண்டிருக்கிறார்கள் என்கிறது ஆய்வு ஒன்று. ஆண்களை போன்று பெண்களுக்கு வழுக்கை விழுவது பொதுவானது அல்ல. ஆனால் பெண்கள் வழுக்கையை எதிர்கொள்வது மனரீதியான பாதிப்பை உண்டாக்க செய்யும்.

முடி உதிர்தல் மற்றும் முடி இழப்பு பிரச்சனையை அதிகம் கொண்டிருப்பவர்கள் பெண்கள் தான். குறீப்பாக கர்ப்பம் மற்றும் பிரசவத்துக்கு பின்பு அதிகமாக முடி இழப்பை சந்திக்கிறார்கள். இதை தடுக்க என்ன செய்யலாம். இதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம். இது நிச்சயம் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் வழுக்கை பிரச்சனையை எதிர்கொள்ளாமல் இருக்க உதவும்.

​பெண்களுக்கு வழுக்கை

 

பெண்களுக்கு உண்டாகும் வழுக்கை என்பது ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா என்று அழைக்கப்படுகிறது. இது மீளமுடியாத பரவலான முடி உதிர்தல் என்று சொல்லலாம்.

பெண்கள் வழுக்கை முன்புற நெற்றியின் மேல் புறத்திலிருந்து தொடங்குகிறது. இது தனிப்பட்ட அடையாளமாக சொல்லப்படுவதால் இதை எப்போதும் கவனிப்பதன் முலம் வழுக்கையை தடுக்க முயற்சிக்கலாம். இது பெண்களின் 40 வயதுக்கு பிறகு தொடங்கும் என்றாலும் வெகு அரிதாக சில பெண்கள் முன்கூட்டியே இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.

​பெண் வழுக்கை அறிகுறிகள்

 
 

பெண் வழுக்கையானது ஆண்களை போன்று இல்லாவிட்டாலும் முதல் அறிகுறி ஏறத்தாழ ஒத்து இருக்கும்.பெரும்பாலும் பெண்களின் வழுக்கை என்பது மூன்று நிலைகளை கொண்டிருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். முடி உதிர்தல் என்பது உச்சந்தலையில் தொடங்குகிறது. ஆண் வழுக்கை போலல்லாமல் முன்பகுதியில் முடிகள் சில இருக்கும்.

முதல் அறிகுறியாக முடி பகிர்வைச் சுற்றியுள்ள மேல் பகுதியில் அடர்த்தி குறைந்து மெல்லியதாக மாறும். இது ஆரம்ப நிலைதான் இதை தொடர்ந்து முடி உதிரும் இடம் விரிவடைந்து முடி அடர்த்தி மேலும் மெல்லியதாக மாறும். தீவிரமாகும் போது முடி மெலிந்து உச்சந்தலை பகுதி தெரியும்படி இருக்கும். இது தீவிரமான வழுக்கை அறிகுறி என்று சொல்லலாம்.

​பெண்வழுக்கைக்கு காரணங்கள்

 

பெண் வழுக்கை காரணங்களாக மரபணுவும் உண்டு. சில பெண்கள் ஆண் ஹார்மோன்களான டி.ஹெச்.டி கொண்டிருந்தால் அது முடியின் வேர்க்கால்களை சேதப்படுத்தும் மரபணுவாக இருக்கலாம். இது முடியின் அடர்த்தியை மெலிதாக ஆக்குகிறது.

முடியின் வேர்க்கால்களை குறுக்க செய்கிறது. முடியின் வளர்ச்சியை குறைக்கிறது. முடி உதிர்தலிலிருந்து மீளக்கூடிய தன்மையை மெதுவாக்குகிறது. இதனால் வழுக்கை நிலை உண்டாகிறது.

​பெண் வழுக்கைக்கு பொதுவான காரணங்கள்

மரபு காரணங்கள் தவிர பெண் வழுக்கை ஆண்களை போன்று ஹார்மோன்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்களின் ஆண்ட்ரோஜன் பெண்களின் மயிர்க்கால்களில் அதிக சேதத்தை உண்டாக்குகிறது. இது வழுக்கை அபாயத்தை உண்டாக்குகிறது. பொதுவாக பெண்களிடம் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் ஆண்களின் ஆண்ட்ரோஜன் ஹார்மோனை எதிர்மறையான செயல்களை எதிர்க்கிறது தடுக்க 

எனினும் ஹார்மோன் ஏற்ற இறக்கம் இருக்கும் போது ஆண்ட்ரோஜன் இடைவிடாமல் உடலில் ஆதிக்கம் செலுத்தும் போது பெண்களின் முடி அடர்த்தியை குறைக்க செய்யும்.அதனால் தான் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலத்தில் முடி மெலிவதை கொண்டிருக்கிறார்கள்.

இந்த காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு படிப்படியாக குறையும். பெண்களின் முன் பகுதியில் ஆண்ட்ரோஜன் ஏற்பிகள் ஆண் நுண்ணறைகளை விட 40% குறைவாக இருக்கும் என்பதால் தான் ஆண்களை போன்று முன்பகுதியில் வழுக்கையை பெறுவதில்லை.

பெண்களுக்கு உண்டாகும் மன அழுத்தம், ஊட்டச்சத்தின்மை, இன்சோமேனியா என்னும் தூக்கமின்மை, மருந்துகள், பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள், ஹார்மோன் சமநிலையின்மை எல்லாமே பெண் வழுக்கைக்கு பொதுவான காரணங்கள்.

பெண் வழுக்கை பரிசோதனையும் தீர்வும்

முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக தொடங்கும் போது நிபுணரிடம் சென்றால் காரணத்தை கண்டறிந்துவிடுவார். ஹார்மோன், தைராய்டு ஹார்மோன், ஆண்ட்ரோஜன் அல்லது வைட்டமின் குறைபாடு போன்றவற்றை கண்டறிய ரத்த பரிசோதனைகள் செய்வார்கள். வெகு அரிதாக அல்ட்ராசவுண்ட் பரிந்துரைக்கப்படும்.

பெண் வழுக்கை ஆரம்ப கட்டமாக இருந்தால் சிகிச்சை எளிதாக இருக்கும். கூந்தல் ஸ்டைலை மாற்றுவதன் மூலம் முடி மெலிந்திருப்பதை வழுக்கையை மறைத்து காண்பிக்கலாம். முடி வழுக்கைக்கு முடி வளர்ச்சியைத்தூண்டும் மினாக்ஸிடில் அளிக்கப்படுகிறது. இது வழுக்கையை குணப்படுத்தாது என்றாலும் தீர்வு கிடைக்கும்.

அடுத்தது ஹார்மோன் சிகிச்சை பெண்களுக்கு ஆண்ட்ரோஜன் விளைவுகளை கட்டுப்படுத்த அல்லது தடுக்கும் வகையில் சில மருந்துகள் பரிந்துரைக்கப்படும். அதே நேரம் ஹார்மோன் மாற்று பக்கவிளைவுகளை கொடுக்கும் என்பதால் இயற்கை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படுகிறது. இது ஈஸ்ட்ரோஜனை அதிகரித்து ஆண்ட்ரோஜனை குறைக்க கூடியவை.

உடல் ஆரோக்கியம் போன்று அழகும் வரும் முன் காப்போம் என்பது போல் தடுத்தால் பெண்களும் வழுக்கை மண்டை தெரியாமல் உலா வரலாம்.

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *