முகத்தை பளிச்சுனு வைக்க அன்னாசி பழம் போதுமாமே , எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?

முகத்தை பளிச்சுனு வைக்க அன்னாசி பழம் போதுமாமே , எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
18 / Post Views.

அன்னாசிபழம் கிடைக்கும் போது முகத்துக்கு இதை மட்டுமே பயன்படுத்தலாம். ஏனெனில் சரும பிரச்சனைகளுக்கு அவை சிறந்த பலன் அளிக்கும்.

பழங்களை பொறுத்தவரை எல்லாவிதமான சருமத்துக்கும் பழங்களை பயன்படுத்தலாம். அதனால் சீஸனுக்கு தகுந்தபடி கிடைக்கும் பழங்களை தவறாமல் உடல் ஆரோக்கியத்துக்கும் அழகு பராமரிக்கும் பயன்படுத்துவது நல்லது. அப்படி சீஸனில் கிடைக்கும் பழங்களில் அன்னாசிப்பழத்தை சருமத்துக்கு எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

சரும பராமரிப்பு என்னும் போது அன்னாசிப்பழம்ஃபேஸ் பேக் பலவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. எனினும் இயற்கையாகவே அன்னாசிபழத்தை கொண்டு செய்யப்படும் ஃபேஸ் பேக் குறித்து பார்க்கலாம்.

​வயதாவதை தடுக்க

 

இளமையாகவே இருக்க விரும்பினால் நீங்கள் அன்னாசிபழ பேக் அடிக்கடி பயன்படுத்தலாம். ஏனெனில் இது ஆக்ஸிஅஜனேற்றிகள் மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் கொண்டிருப்பதால் சருமத்தை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் எதிர்த்து போராட செய்கிறது. அதோடு உங்கள் சருமத்தையும் ஒளிரவும் செய்கிறது.

தேவை

அன்னாசிபழத்துண்டுகள் – 3

தேங்காய்ப்பால் – 3 டீஸ்பூன் ( முதல் பாலை இயன்றால் நீர் விடாமல் அரைத்து பயன்படுத்துங்கள்)

அன்னாசிபழத்துண்டுகளை நறுக்கி அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடிக்கவும். நீர் சேர்க்க வேண்டாம்.

பழத்தில் இருக்கும் நீர்ச்சத்தும் தேங்காப்பாலுமே போதும். இவை நன்றாக பேஸ்ட் பதத்துக்கு வந்ததும் முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை மந்தமான நீரில் கழுவினால் போதும். பிறகு சருமத்துக்கேற்ற மாய்சுரைசர் பயன்படுத்துங்கள். இளமையாக இருப்பீர்கள்.

​முகப்பருவுக்கான ஃபேஸ் பேக்

 

அன்னாசிபழம் சருமத்தின் மூன்று அடுக்குகளிலும் சென்று சுத்தம் செய்ய உதவும். முகப்பரு இருப்பவர்கள் அன்னாசிபழத்தை பேக் போட பயன்படுத்தினால் அதனோடு க்ரீன் டீ பேக் யூஸ் செய்வது பலனை அதிகரிக்க செய்யும். இது முகப்பருவை கட்டுப்படுத்தும். கூடுதலாக முக பொலிவுக்கு தேன் சேர்க்கலாம். இது முகத்தை ஒளிர வைக்க உதவும்.

தேவை

அன்னாசிபழத்துண்டுகள் – 3

தேன் – 2 டீஸ்புன்

க்ரீன் டீ – 3 டீஸ்பூன்

மூன்றையும் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அடிக்கவும். முகத்தை சுத்தமாக கழுவி இந்த பேஸ்ட்டை குழைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் பேக் போட்டு விடவும். ஐந்து நிமிடங்களுக்கு பிறகு வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகப்பருக்கள் மறையும். தழும்புகளும் இருக்காது.

​முகத்தழும்புகளை போக்கும் பேக்

 

அன்னாசிபழத்தை கொண்டு சருமத்தில் இருக்கும் தழும்புகளை போக்கலாம். அம்மையால் வந்த தழும்புகள், முகப்பருக்களால் உண்டாகும் வடுக்கள், காயங்கள், தேமல் போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது அதற்கு அன்னாசிப்பழம் உதவும். அன்னாசிப்பழத்தில் இருக்கும் அஸ்கார்பிக் அமிலம் வடுக்களையும் சருமம் இழந்த நிறத்தையும் மீட்க செய்கிறது. கருமை நிறத்தை மறைக்க உதவுகிறது. சருமத்தின் இறந்த செல்களையும் நீக்குகிறது. தேவை

அன்னாசிபழத்துண்டுகள் – 5

அன்னாசிபழத்துண்டுகளை நறுக்கி நீர் சேர்க்காமல் அரைத்து சாறு எடுக்கவும். முகத்தை சுத்தமாக கழுவி சுத்தமான காட்டனை சாறில் தோய்த்து முகம் முழுக்க தடவி விடவும். உலரும் வைத்திருந்து மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். அதிக மெனக்கெடல் இல்லாத பராமரிப்பு என்பதால் இதை தினமும் செய்து வரலாம்.

​பிரகாசமான சருமத்துக்கு பேக்

 

முகம் தெளிவாக பிரகாசமாக இருக்க விரும்பினால் நீங்கள் கண்ணை மூடியபடி அன்னாசிப்பழத்தை தேர்வு செய்யலாம். இது முகத்துக்கு பயன்படுத்தும் போது முகத்தின் இறந்த செல்களை நீக்குவதால் முகத்தை பளிச்சென்று வைக்க செய்கிறது. தெளிவான அழகான முகத்துக்கு அன்னாசிப்பழ ஃபேஸ் பேக் போதுமானது.

தேவை

அன்னாசிபழத்துண்டுகள் – 3

பாசிப்பயறு மாவு அல்லது கடலை மாவு – 3 டீஸ்பூன்

பால் – 5 டீஸ்பூன்

பன்னீர் – 3 டீஸ்பூன்

அன்னாசிபழத்துண்டு மசித்து அதனோடு மாவு கலந்து பால் மற்றும் பன்னீர் சேர்த்து கலக்கவும். நன்றாக தடிமனான ஃபேஸ் பேக் தயாரித்து முகம் மற்றூம் கழுத்துப்பகுதியை சுத்தமாக கழுவி முகம் மற்றும் கழுத்தில் பேக் போடவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுக்கவும். வாரம் ஒரு முறை இந்த பேக் போட்டு வந்தால் முகம் ஜொலிப்பதை கண்ணார காணலாம்.

​மென்மையான உதட்டுக்கு

 

உதடுகள் வெடித்து, வறட்சியாக, சமயங்களில் ரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது அதை சரி செய்ய நீங்கள் முதலில் அன்னாசிப்பழத்தை தேர்வு செய்யலாம். அன்னாசிபழச்சாறு மட்டும் எடுத்து உதட்டில் தடவி கொண்டே இருந்தால் அது வறண்ட வெடித்த உதடுகளுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது.

உதட்டுக்கு ஸ்க்ரப் செய்வதன் மூலம் உதட்டை மினுமினுப்பாக வைத்திருக்க விரும்பினால் அன்னாசிபழச்சாறுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து வெள்ளை சர்க்கரை சேர்த்து உதட்டுக்கு ஸ்க்ரப் செய்வதன் மூலம் உதட்டை கவர்ச்சியாக வைத்திருக்கலாம். இனி அன்னாசிபழத்தை எங்கு பார்த்தாலும் தவிர்க்காதீர்கள். உள்ளுக்கும், வெளிப்புற அழகுக்கும் சிறப்பாக உதவும்.

 

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *