பிறந்த குழந்தைக்கு 2 வயசுக்குள்ள தான்மூளை வளர்ச்சி அதிகமா இருக்கும்! அறிவாளியா வளர என்ன செய்யணும்!

பிறந்த குழந்தைக்கு 2 வயசுக்குள்ள தான்மூளை வளர்ச்சி அதிகமா இருக்கும்! அறிவாளியா வளர என்ன செய்யணும்!
26 / Post Views.
குழந்தையின் வளர்ச்சியை வெளிப்புறமாக பார்க்கிறோம். ஆனால் குழந்தையின் மூளை வளர்ச்சியை உறுதி செய்வதும் அவசியம். அதற்கு முதல் படி ஆரோக்கியமான தாய்ப்பால் தான்.
 

 

குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு தாய்ப்பால் மிகவும் அவசியம் என்பது தெரியும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் இந்த தாய்ப்பால் அதிகமாக உதவுகிறது என்கிறது ஆய்வுகள்.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அபாரமாக இருப்பதாக ஆய்வு நிரூபித்துள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால் தான் எதிர்ப்பு சக்தி அளிக்கும் மருந்து. அதே போன்று குழந்தைகளின் மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளார்கள். தாய்ப்பாலுக்கும் மூளைக்குமான தொடர்பு என்ன என்று பார்க்கலாம்.

​முதல் சீம்பால்

பிறந்த குழந்தை 30 நிமிடத்துக்குள் தாய்ப்பால் குடிக்க வைக்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய குழந்தையாக இருந்தால் 4 மணி நேரத்துக்கு உள்ளும் தாய்ப்பால் அருந்த பழக வேண்டும். சீம்பால் என்று அழைகப்படும் இதில் தான் இமியூனோகுளோடியூன் என்னும் நோய் எதிர்ப்பு புரத தொற்று நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் தான் உணவு. குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதனால் தான் தொற்றுகள் எளிதில் குழந்தைகளை தாக்கும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தையின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

குழந்தைக்கு ஆறு மாதங்கள் வரை வெறும் தாய்ப்பால் மட்டுமே உணவாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் குழந்தை வளர வளர தாய்ப்பால் போதுமானதாக இல்லாமல் பற்றாக்குறையாகிவிடுகிறது. அப்போது இணை உணவு தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.

​தாய்ப்பால் தரும் சத்து

தாய்ப்பால் எதிர்ப்பு சக்தி அளிக்க கூடியது. வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகளின் கலவையை கொண்டுள்ளது. இது குழந்தையின் வளர்ச்சியை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது. குழந்தையின் வளர்ச்சியை முதல் ஒரு வருடத்தில் வேகமாக எதிர்பார்க்கலாம்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தை மன வளர்ச்சி முதல் உடல் வளர்ச்சி வரை அனைத்தையும் ஆரோக்கியமாக பெற்று வளர்கிறார்கள். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும். இது குறித்து ஆய்வு சொல்வது என்ன என்று பார்க்கலாம்.

​குழந்தையின் மூளை வளர்ச்சி

பிறந்த குழந்தையின் மூளை வளர்ச்சியானது குழந்தையின் 2 வயதுக்கு முன்பே பெருமளவு நிகழ்ந்துவிடுகிறது. குழந்தை தன்னுடைய 2 வயதை எட்டும் போது அதன் மூளை வளர்ச்சியில் 80% வளர்ந்திருக்கும். இந்த விரைவான வளர்ச்சியை ஆதரிக்க உடலுக்கு அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றது.

குழந்தையின் மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான் சிக்கலை தீர்க்கும் வகையில் அறிவாற்றல் வளர்ச்சியை மேம்படுத்த முடியும் என்பதால் இந்த மூளை வளர்ச்சியில் கவனக்குறைவு கொண்டிருக்க கூடாது. இந்த வயதில் குழந்தைக்கு அவசியம் தாய்ப்பால் தான். இதுதான் முதன்மை ஊட்டச்சத்தும் கூட. அதனால் தாய்ப்பாலை குழந்தைக்கு பற்றாக்குறையின்றி வழங்க இளந்தாய்மார்கள் முயற்சி செய்ய வேண்டும்.

​மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துகள்

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது இணைஉணவிலும் சீரான ஊட்டச்சத்தை சேர்க்க வேண்டும். கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் கொழுப்புகள் தாதுக்கள் வைட்டமின்கள் போன்றவற்றையும் சேர்ப்பது அவசியம்.

குழந்தைக்கு தாய்ப்பால் வயிற்றில் கோளாறுகளை உண்டாக்காமல் சமநிலையில் வைத்திருக்க செய்கிறது. தாய்ப்பால் கேசின் புரதங்களின் பொருத்தமான விகிதத்தை கொண்டிருப்பதால் இது குழந்தையின் ஜீரணத்தை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது. தாய்ப்பாலில் இருகும் அதிக கொழுப்பு குழந்தைக்கு அதன் கலோரி தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.

​தாய்ப்பாலில் இருக்கும் கொழுப்புகள்

தாய்ப்பாலில் இருக்கும் அதிக கொழுப்பு அடக்கமானது குழந்தைக்கு அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களை பெற செய்கிறது. இந்த கொழுப்பு உடலால் தானாக உற்பத்தி செய்ய முடியாது. இது உணவு மூலங்களிலிருந்து வர வேண்டும்.

அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உறுப்பு வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தாய்ப்பாலில் அத்தியாவசியமான கொழுப்புகளில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அடங்கும். இதுதான் குழந்தையின் ஆரம்ப கால ஆண்டுகளில் மூளை மற்றும் நரம்பு மண்டலம் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

​மூளை வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் தாய்ப்பால்.

உலக சுகாதார நிறுவனம் 6 மாதங்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க பரிந்துரை செய்கிறது. குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சியை உ றுதிப்படுத்த சரியான ஊட்டச்சத்து தேவை.

தாய்ப்பால் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவுகிறது. தாய்ப்பாலில் காணப்படும் இந்த ஊட்டச்சத்துகள் குழந்தையின் அறிவாற்றல் திறன்களையும் நினைவக செயல்பாடுகளையும் பாதிக்க செய்கிறது.

தாய்ப்பாலில் காணப்படும் சோலின் நரம்பு உயிரணு உருவாக்கம் மற்றும் நரம்பியல் தூண்டுதல்களை பரப்ப செய்கிறது.தாய்ப்பாலில் இருக்கும் டிஹெச்ஏ மற்றும் ஏஆர்ஏகொழுப்பு அமில உள்ளடக்கத்தின் முக்கிய பகுதி. தாய்ப்பாலில் இருக்கும் கொழுப்பில் 25% டிஹெச்ஏ மற்றும் ஏஆர்ஏ போன்றவற்றை கொண்டுள்ளது. இது உகந்த ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை ஆதரிக்க செய்கிறது.

இந்த இரண்டு பாஸ்போலிப்பிட்கள் உயிரணு சவ்வுகளில் காணப்படுகின்றன. இந்த டிஹெச்ஏ ஆனது மூளை செல்களில் காணப்படுகிறது. பாஸ்போலிப்பிட்கள் ஒரு வகையான கொழுப்பு. இதுதான் உயிரணு சவ்வுகளை உருவாக்குகிறது. குழந்தையின் நரம்பு உயிரணு செயல்பாடுகளிலும் நரம்பு துண்டுதல்களை நடத்துவதிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது.

 

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *