தேசிய விருது வென்ற கலைஞர்களுக்கு இயக்குநர் பாரதிராஜாவின் வாழ்த்து மடல்..

தேசிய விருது வென்ற கலைஞர்களுக்கு இயக்குநர் பாரதிராஜாவின் வாழ்த்து மடல்..
6 / Post Views.

67வது தேசிய விருதுகள் நேற்று இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் அசுரன், தனுஷ், விஜய் சேதுபதி, டி. இமான், நாக விஷால், ஒத்த செருப்பு சைஸ் 7 என 7 விருதுகளை அள்ளியுள்ளது தமிழ் திரைப்பட உலகம்.

67வது தேசிய விருதுகள் இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகர், துணை நடிகர், குழந்தை நட்சத்திரம், இசையமைப்பாளர் என 7 தேசிய விருதுகளை குவித்துள்ள தமிழ் திரைப்பட உலக நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. பலரின் வாழ்த்துக்களுக்கு வெற்றியாளர்களும் தொடர்ந்து நன்றி சொல்லி வருகின்றனர். அந்த வரிசையில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இயக்குனர் பாரதி ராஜா விருது வென்ற கலைஞர்களுக்கு நெகிழ்ச்சியான வாழ்த்து மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, தேசிய அளவிலான அங்கீகாரம் ஒவ்வொரு கலைஞனுக்குமான எதிர்பார்ப்பாக இருக்கு. கடின உழைப்பை மதிக்க வேண்டும். கடின உழைப்பை மதிக்க வேண்டும். அந்த உழைப்பு தேசிய அளவில் உச்சி நுகரப்பட வேண்டும் என்பதற்காக ஏற்பாடுத்தப்பட்ட அவ்விருதை ஏற்புடைய கலைஞர்கள் பெறும்போது தமிழ் சினிமா தலை நிமிர்கிறது.

2019 ல் வெளியான படங்களில் எல்லோரையும் அசத்தியெடுத்த படம் ‘அசுரன்’. அதோடு சில நல்ல படங்களும் தேர்வில் கலந்து கொண்டன. 2019 ஆம் ஆண்டில் நமக்கு நெருக்கமான படமான அசுரனுக்காக சிறந்த நடிகர் விருது அசுர உழைப்பாளரான திரு. தனுஷுக்கு கிடைத்தது உண்மையிலேயே பெருமை கொள்கிறது தமிழ்சினிமா. அசுரனை இயக்கிய திரு. வெற்றிமாறன், தயாரிப்பாளர் திரு. கலைப்புலி எஸ்.தாணு ஆகிய மூவருக்கும் வாழ்த்துக்கள்.

நம்மை பெருமைகொள்ளச் செய்யும் இயல்பான நடிகர் திரு.விஜய்சேதுபதிக்கு சிந்த துணை நடிகர் விருது சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நம் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததற்கு கிடைத்ததில் மகிழ்கிறோம். சிறந்த படத்திற்கான சிறந்த விருதை பெற்ற ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் நாயகன் திரு. பார்த்திபனுக்கும், அப்படத்தின் ஒலிப்பதிவு கலைஞரான திரு. ரசூல் பூக்குட்டிக்கும் பெருமை மிகு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

விஸ்வாசம் திரைப்படத்திற்கான சிறந்த இசையமைப்பாளர் விருதினை பெற்ற திரு. இமானுக்கும், K.D. என்கிற கருப்புதுரை என்ற அழகிய படத்தில் நம்மை அதிகம் கவர்ந்த குழந்தை நட்சத்திரம் நாக விஷாலுக்கும் தேசிய விருது கிடைத்ததற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

உங்கள் அனைவரும் அங்கீகாரமே நம் தமிழ் சினிமாவை பெருமை கொள்ளச் செய்திருக்கிறது. உள்ளபடியே பெருமை கொள்கிறோம். வாழ்த்துகிறோம். ஒவ்வொரு ஆண்டும் உங்களின் மதிப்பிற்குரிய திறனை வெளிப்படுத்துங்கள் வாழ்த்துக்கள். உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா என்று நிறைவடைகிறது வாழ்த்து மடல்.

 

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *