ஒரு மாஸ்க் போதும்.. ஓவர்நைட்டில் பணக்காரர் ஆகிடலாம்.. உங்ககிட்ட இருக்கா?

ஒரு மாஸ்க் போதும்.. ஓவர்நைட்டில் பணக்காரர் ஆகிடலாம்.. உங்ககிட்ட இருக்கா?
25 / Post Views.

பாதுகாப்பான, சவுகரியமான விலை குறைவான மாஸ்கை உருவாக்குவோருக்கு லட்சக்கணக்கான டாலர் பரிசாக வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில் மாஸ்க் அணிய வேண்டியது மிக அவசியமாக இருக்கிறது. மக்களிடையே மாஸ்க் அணிவதை ஊக்குவிக்க அரசுகளும், சுகாதார வல்லுநர்களும் முயற்சித்து வருகின்றனர். ஆனால், நீண்ட நேரத்துக்கு மாஸ்க் அணிந்துகொள்வது கஷ்டமாக இருப்பதாக பலரும் புகாரளித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாதுகாப்பான, குறைந்த விலையில், அணிந்துகொள்ள எளிமையான மாஸ்கை உருவாக்குவோருக்கு பெரிய தொகையை பரிசாக அளிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் Biomedical Advanced Research and Development Authority (BARDA) இந்த சேலஞ்சை அறிவித்துள்ளது.

இந்த சேலஞ்சில் குறைந்த விலையில், புதுமையான, பாதுகாப்பான, சவுகரியமான மாஸ்க் உருவாக்க வேண்டும். மாஸ்க் போட்டுக்கொள்பவரின் சவுகரியமே பிரதானம். இந்த போட்டியில் அமெரிக்காவில் இருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முடியுமென தெரிவித்துள்ளனர்.

போட்டியின் மொத்த பரிசுத் தொகை 5 லட்சம் டாலர். முதற்கட்ட போட்டியில் 10 வெற்றியாளர்களுக்கு தலா 10,000 டாலர் வழங்கப்படும். டிசைன்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 21. இரண்டாம் கட்ட போட்டியில் ஐந்து வெற்றியாளர்களுக்கு 4 லட்சம் டாலர் சரிபாதியாக பிரித்தளிக்கப்படும்.

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *