சொந்த தங்கச்சியா?.. கலங்கிய மணமகன்.. பெற்றோர் கொடுத்த ட்விஸ்ட்.. பாரிஸ் ஜெயராஜ் பாணி சம்பவம்!

சொந்த தங்கச்சியா?.. கலங்கிய மணமகன்.. பெற்றோர் கொடுத்த ட்விஸ்ட்.. பாரிஸ் ஜெயராஜ் பாணி சம்பவம்!
33 / Post Views.

சீனாவின் ஜியாங்க்சு பகுதியில் வசிக்கும் ஒரு மணமகனுக்கு மணமகளுக்கும் திருமணம் செய்ய பெரியோர் நிச்சயித்தனர்.

திருமணம் நடக்க இன்னும் சில நிமிடங்களே இருக்கும் நிலையில், உறவினர்களும் மணமகளும் மணமகனும் சந்தோஷமாக இருந்துள்ளனர். அப்போதுதான் ஒரு பூகம்பம் வெடித்தது.  காரணம் மணமகளின் உடலில் இருந்த தழும்பு தான். மணமகளின் உடலில் பிறப்பில் இருந்தே இருந்த அடையாளத் தழும்பை பார்த்த மணமகனின் தாய் அதிர்ச்சி அடைந்ததுடன் மணமகளின் உண்மையான பெற்றோர் மற்றும் பூர்விகம் பற்றி இன்னும் ஆழமாக மணமகளின் குடும்பத்தினரிடம் விசாரிக்கத் தொடங்கினார்.

அப்போதுதான் 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மணமகளை சாலையோரத்தில் தத்தெடுத்து வளர்த்ததாக அந்த மணமகளின் பெற்றோர் சொல்ல, மணமகனின் பெற்றோரோ அதே 20 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பெண் குழந்தையை தொலைத்துவிட்டதாகவும் கூற, அந்த பெண் தான் இந்த மணமகள் என்பதை அனைவரும் உறுதி செய்தனர். இந்த தகவல் தெரிந்ததும், தனது நிஜமான தாயை கண்டடைந்த மகிழ்ச்சியில் அவரை கட்டியணைத்து அழுதார். ஆனால் இதனால் மணமகள் மணமகனுக்கு தங்கை முறையாவதால், என்ன செய்வதென அறியாமல் அனைவரும் தவித்தனர்.

நடிகர் சந்தானம் நடித்து அண்மையில் வெளிவந்த பாரிஸ் ஜெயராஜ் படத்தில் அவரது தந்தை 2 மனைவிகளுக்கு கணவராக இருந்து 2 குடும்பங்களை ஏமாற்றி வர, சந்தானம் தன் தங்கையையே காதலித்து திருமணம் வரை செல்வார். ஆனால் கடைசி நேரத்தில் விஷயம் தெரிந்து திருமணம் நின்றுவிடும். அப்படித்தான் இப்போது இந்த நிஜ கதையில் நடந்திருக்கிறது. ஆனால் இதன் பின்னர் இந்த சீன மணமக்கள் கதையில் ஒரு ட்விஸ்ட் நடந்துள்ளது. அதன்படி மணமகளை 20 வருடத்துக்கு முன்பு தொலைத்ததால், வேறு ஒரு ஆண் மகனை தத்தெடுத்து வளர்த்துள்ளனர் அந்த பெற்றோர். இந்த உண்மை தெரியவந்ததை அடுத்து, இருவரும் உறவுமுறையில் உடன் பிறந்த அண்ணன் – தங்கை இல்லை என்பதால் இருவரும் நிச்சயித்தபடி திருமணம் செய்துகொண்டனர்.

பாரிஸ் ஜெயராஜ் படத்திலும் இறுதியில் இப்படி ஒரு ட்விஸ்ட்டை வைத்திருப்பார்கள். இறுதியில் நாயகியின் அம்மாவின் தம்பி மகள் தான் நாயகி என்கிற உண்மை தெரியவரும். ஆனால் அதற்குள் நாயகிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *