விஜய் பயன்படுத்திய சைக்கிளின் விலை எவ்வளவு தெரியுமா? என்ன மாடல்? முழு விபரம்!

விஜய் பயன்படுத்திய சைக்கிளின் விலை எவ்வளவு தெரியுமா? என்ன மாடல்? முழு விபரம்!
36 / Post Views.

நடிகர் விஜய் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு ஓட்டு போட சைக்கிளில் பயணித்து வந்த சம்பவம் தான தமிழகத்தில் ட்ரெண்ட் ஆனது

.

நீலாங்கரையில் உள்ள தமது வீட்டிற்கு அருகில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு மாஸ்க் அணிந்த படி சென்று வாக்களித்தார். அவர் சைக்கிளில் வாக்களிக்க செல்லும்போது அவருடன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.

 

இந்த சம்பவத்தை தொடர்ந்து விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்ததற்கான காரணமும் வெளியானது. அதன்படி தமது வீட்டுக்கு அருகே இருக்கும் அந்த வாக்குச் சாவடியில் வாக்களிப்பதற்காக விஜய் காரில் சென்றால் அங்கு வாக்களிக்க வரும் மற்றவர்களுக்கு டிராபிக் இடையூறுகள் நேரலாம் என்று கருதிய விஜய் தம் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்று வாக்களித்து விட்டு வந்ததாக விஜய் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியானது.

இன்னொருபுறம் தேர்தல் முடிந்த அன்றே நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 திரைப்படத்தில் நடிப்பதற்காக ஜார்ஜியா புறப்பட்டு சென்ற புகைப்படங்களும் வைரலாகின.  இதனிடையே விஜய் பயணித்த சைக்கிளைப் பற்றிய பேச்சுகள் அதிகமாகியுள்ளன. பெர்ஃபார்மென்ஸ் வகை சைக்கிள் மாடல்களை தயாரிக்கும் மான்ட்ரா நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்று தான் விஜய் பயணித்த 2019-ம் ஆண்டு மான்ட்ரா நிறுவனம் வெளியிட்ட இந்த மெட்டல் மாடல் சைக்கிள்.

16 கிலோ எடை கொண்ட இந்த சைக்கிளின் விலை ரூ.22,500. கார்பன் பிளாக் மற்றும் நியான் ரெட் என இரட்டை வண்ணக் கலவை மேட் ஃபினிஷில் கொடுக்கப்பட்டுள்ள இந்த சைக்கிளில் 24 ஸ்பீடு கியரும் மெக்கானிக்கல் டிஸ்க் பிரேக்குகளும் உள்ளன. 29 X 2.1 அங்குல அளவுடைய எம்டிபி டயர்கள் மற்றும் எக்ஸ்எம்ஆர் அலாய் ஹேண்டில்பார் கொண்ட சைக்கிளின் ரகம் மவுன்டெயின் பைக் ரகம். ஆக, இந்த மான்ட்ரா மெட்டல் 29 சைக்கிள் மாடலையே வாக்களிக்க செல்லும்போது எடுத்தச் செல்ல பயன்படுத்தியுள்ளார் விஜய்.

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *