சாப்பிடும் போது மாஸ்க்கை போடுங்க’… ‘கொந்தளித்த விமான பணிப்பெண்’… ‘அதோடு நிற்காமல் செய்த செயல்’… அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வீடியோ!

சாப்பிடும் போது மாஸ்க்கை போடுங்க’… ‘கொந்தளித்த விமான பணிப்பெண்’… ‘அதோடு நிற்காமல் செய்த செயல்’… அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வீடியோ!
56 / Post Views.

சாப்பிடும் போது மாஸ்க் போடவில்லை என்ற காரணத்திற்காகக் கர்ப்பிணிப் பெண்ணிடம் விமானப் பணிப்பெண் நடந்து கொண்ட விதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் குழந்தையோடு பயணம் செய்யத் தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். அந்த பெண் ஒரு கர்ப்பிணி ஆகும். இந்நிலையில் அந்த பெண்ணின் மடியிலிருந்த அவரது குழந்தை சாப்பிட்டுக் கொண்டு இருந்தது.

அப்போது அங்கு வந்த விமானப் பணிப்பெண், நீங்கள் முகக்கவச விதியை மீறிவிட்டீர்கள். எனவே உங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு விமானத்திலிருந்து இறங்குங்கள் எனக் கடுமையாகக் கூறினார். ஆனால் அந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின்னர் தான் தனது குழந்தை சாப்பிட்டுக் கொண்டு இருப்பதை உணர்ந்த அவர், குழந்தை சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறது.

சாப்பிட்டு முடிந்ததும் முகக்கவசத்தை மாட்டி விடுகிறேன் என அந்த பெண் கூறியுள்ளார். ஆனால் நீங்கள் விதியை மீறிவிட்டீர்கள் எனவே உடனே விமானத்தை விட்டு கீழே இறங்குங்கள் எனக் கடுமையாகக் கூறினார். கீழே இறங்க மறுத்தால் போலீசை அழைக்க வேண்டி இருக்கும் என எச்சரித்தார். ஆனாலும் நான் ஒரு கர்ப்பிணி என்னால் இறங்க முடியாது எனப் பிடிவாதமாக அவர் மறுத்து விட்டார்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்த வீடியோவை பதிவிட்டிருந்த யூத பொது விவகார கவுன்சிலை சேர்ந்த Yossi என்பவர், ”அந்த பெண் 7 மாத கர்ப்பிணி ஆவர். அதோடு தனது 2 வயதுக் குழந்தையையும் அவருடன் வைத்திருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த குடும்பத்தினரை விமானத்தை விட்டு கீழே இறக்கிவிட்டார்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *