ஊடகவியலாளர் கசோஜியின் மரணம்: சவுதியின் முக்கிய இணையத்தளம் மீது தாக்குதல்

ஊடகவியலாளர் கசோஜியின் மரணம்: சவுதியின் முக்கிய இணையத்தளம் மீது தாக்குதல்

சவுதி அரேபியாவில் நடைபெறவிருந்த “டாவோஸ் இன் த டெசர்ட்” முதலீட்டு மாநாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்டிருந்த இணையத்தளத்துக்கு ஹேகர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானிய டேலிமெய்ல் செய்தித்தளம் அறிவித்துள்ளது.

ஊடகவியலாளர் ஜமால் கசோஜியின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாநாடு இன்று (23) சவுதியில் ஆரம்பமாக இருந்தது. இருப்பினும், ஊடகவியலாளர் ஜமாலின் கொலையையடுத்து அந்த மாநாட்டை ஒத்திவைக்க சவுதி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

சவுதிக்கு சர்வதேச ரீதியில் விடுக்கப்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக இந்த மாநாட்டை ஒத்திவைக்க வேண்டிய நிலைக்கு சவுதி தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த அரச தலைவர்கள், நிதி அமைச்சர்கள், வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், உலக புகழ்பெற்ற நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் என்பன அந்த மாநாட்டைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.  (மு)

The post ஊடகவியலாளர் கசோஜியின் மரணம்: சவுதியின் முக்கிய இணையத்தளம் மீது தாக்குதல் appeared first on Daily Ceylon.