எங்களை சிறையில் அடைத்தால், ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் போராடுவோம் – கே.பாலகிருஷ்ணன்

எங்களை சிறையில் அடைத்தால், ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் போராடுவோம் – கே.பாலகிருஷ்ணன்

சென்னை – சேலம் இடையிலான எட்டு வழி சாலை விவகாரத்தில், தங்களை சிறையில் அடைத்தால், ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘என் நிலம் என் உரிமை’ என்ற பெயரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபயணம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் இருந்து சேலம் நோக்கி நடைபெற்ற நடைபயணத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில், நடைபயணத்திற்கு அனுமதி இல்லை எனக் கூறி, நடைபயணம் சென்ற 90 பேரை காவல்துறையினர் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். அப்போது, நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்த பாலகிருஷ்ணன், சிறைக்கு செல்ல தாங்கள் தயாராக இருப்பதாக கூறினார். தங்களை சிறையில் அடைத்தால், ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.