கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் விடுவிப்பு!

கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் விடுவிப்பு!

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கட்சியின் நிர்வாகிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக இருந்த எம்.பி. விஜயகுமார் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மாவட்டத்திற்கு அசோகன் என்பவரும், மேற்கு மாவட்டத்திற்கு ஜான் தங்கம் என்பவரும் இன்று முதல் நியமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளராக கணேச ராஜா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. 

புதிய மாவட்ட செயலாளர்களுக்கு கட்சியின் நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அதிமுக தலைமைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது