திமுக தலைவர் கருணாநிதி மிகச்சிறந்த போராளி – கேரள முதல்வர் பினராயி விஜயன்

திமுக தலைவர் கருணாநிதி மிகச்சிறந்த போராளி – கேரள முதல்வர் பினராயி விஜயன்

திமுக தலைவர் கருணாநிதி மிகச்சிறந்த போராளி எனவும், அவரது மனோதிடம் மீண்டும் ஒருமுறை வெற்றி பெற்றிருப்பதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட கருணாநிதிக்கு, காவேரி மருத்துவமனையில் தொடர்ந்து 6வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 10.45 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி மற்றும் கருணாநிதி குடும்பத்தினரிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதியின் உடல்நிலை விரைவாக சீரடைந்து வருவதாக ஸ்டாலின் மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் கூறியதாக தெரிவித்தார். கருணாநிதி பூரண குணமடைய, கேரள மக்கள் சார்பில் வாழ்த்துவதாகவும் முதல்வர் பினராயி விஜயன் அப்போது குறிப்பிட்டார்.