நாடாளுமன்ற தேர்தலை வாக்குச் சீட்டு முறையிலேயே நடத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் 17 கட்சிகள் வலியுறுத்தல்!

நாடாளுமன்ற தேர்தலை வாக்குச் சீட்டு முறையிலேயே நடத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் 17 கட்சிகள் வலியுறுத்தல்!

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை வாக்குச் சீட்டு முறையிலேயே நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் 17 கட்சிகள் வலியுறுத்தல் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடுகளை நிகழ்த்த முடியும் என்பதால் அதற்குப் பதிலாக பழைய நடைமுறைப்படி வாக்குச் சீட்டுகள் மூலம் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.

சமீபத்தில் நடைபெற்ற பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களின்போதும் இந்தக் கோரிக்கை வலுவாக எழுந்தது. ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நிகழ்த்த வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது.

இந்நிலையில் வாக்குச் சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி 17 கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.