கஹட்டோவிட்ட JF அணி சம்பியன்

கஹட்டோவிட்ட JF அணி சம்பியன்

ஓகொடபொல யூத் விளையாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு 11 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி கஹட்டோவிட்ட பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

நேற்றைய தினம் (24) நடைபெற்ற இறுதிப்போட்டியில் கஹட்டோவிட்ட JF A மற்றும் ஓகொடபொல யூத் B அணிகள் மோதின. ஓவருக்கு 4 பந்துகள் வீதம் 4 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யூத் B அணியினர் 3 விக்கெட்களை இழந்து 32 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு ஆடிய JF A அணியினர் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து 3 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி இலக்கை தாண்டியது. போட்டிக்கு பிரதான அனுசரணையாளராக அத்தனகல்ல பிரதேச சபை வேட்பாளர் பவாஸ் கிண்ணங்களை வழங்கி வைக்கும் நிகழ்விலும் கலந்து சிறப்பித்தார். (நு)

– கஹட்டோவிட்ட ரிஹ்மி –

kahatowita1

kahatowita2

kahatowita3

The post கஹட்டோவிட்ட JF அணி சம்பியன் appeared first on Daily Ceylon.