ஜமால் கசோஜியின் புதல்வர்களுடன் சவுதி மன்னர் விசேட சந்திப்பு

ஜமால் கசோஜியின் புதல்வர்களுடன் சவுதி மன்னர் விசேட சந்திப்பு

கொலை செய்யப்பட்ட ஜமால் கசோஜியின் இரு புதல்வர்கள் சவுதியின் மன்னர் குடும்பத்துடன் நேற்று (23) சந்திப்பொன்றை நடாத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சந்திப்பில் சவுதி மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இச்சந்திப்பின் போது ஜமால் கசோஜியின் மரணம் தொடர்பில் அவரது புதல்வர்களிடம் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துருக்கி அரசாங்கம் கொலையாளியைக் கண்டு பிடித்து சட்டத்தை நிலைநாட்ட விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அவரது புதல்வர்களை மன்னர் குடும்பத்தினர் நெருங்கியிருப்பதில் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  (மு)

The post ஜமால் கசோஜியின் புதல்வர்களுடன் சவுதி மன்னர் விசேட சந்திப்பு appeared first on Daily Ceylon.