திருகோணமலையைச் சேர்ந்த உல்லாசப் பயண விடுதிகளுக்கிடையில் கிரிக்கெட் போட்டி 30 ஆம் திகதி இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 12 உல்லாசப் பயண விடுதிகளைச் சேர்ந்த 21 அணிகள் பங்கு பற்றியது. இவ் வைபவத்துக்கு சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வைத்திய கலாநிதி ஞானகுணாளனும் கலந்து சிறப்பித்தார்கள்.
இதில் இறுதிச் சுற்றில் மரகோஷா பே (Margosa Bay ) அணியும் அனந்தமாமா (Anantama) அணியும் போட்டியிட்டனர். அதில் மரகோஷா பே (Margosa Bay ) அணி வெற்றி பெற்றது.
முதலாவதாக வந்த மரகோஷா பே (Margosa Bay ) அணி Rs.50,000/= ரூபாவும் வெற்றிக் கோப்பையும் பெற்றுக் கொண்டது.
மூன்றாவதாகத் திருமலை ப்ளூ சினமென் (Trinco Blu by Cinnomon) வெற்றி பெற்றது. (நு)
– ஹஸ்பர் ஏ ஹலீம் –
The post திருகோணமலை உல்லாசப் பயண விடுதிகளுக்கிடையில் கிரிக்கெட் போட்டி appeared first on Daily Ceylon.