​அறிமுகமானது ‘ரெட் மீ நோட் 6 ப்ரோ’!

​அறிமுகமானது ‘ரெட் மீ நோட் 6 ப்ரோ’!

இந்தியாவில் கடந்த ஒரு வருடமாக மொபைல் விற்பனையில் முதலிடத்தில் இருப்பது ரெட் மீ நிறுவனம். ரெட் மீ நோட் 5 ப்ரோ, மொபைல் உலகில் அறிமுகமாகி சில மாதங்களுக்கு முன்பு மொபைல் விற்பனையில் மாபெருமளவில் சாதனை செய்தது. கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ப்ளிப் கார்டில் நோட் 5 ப்ரோவிற்கு 4.5/5 ரேட்டிங் கொடுத்தது பெரியலவில் பேசப்பட்டது. 

இந்நிலையில் தற்போது ரெட் மீ நோட் 6 ப்ரோ-வை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் MIUI 10 இயங்குதளம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் கேமராக்களும் அதன் சிறப்பம்சங்களும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இதன் சிறப்பம்சங்களை தற்போது காணலாம்…

மொபைல் ஸ்க்ரீன் : 6.26-inch full-HD+ IPS LCD full screen panel with a 19:9 aspect ratio, 86 percent screen-to-body ratio, Corning Gorilla Glass protection.

செயலி : 14nm octa-core Qualcomm Snapdragon 636 SoC, coupled with an Adreno 509 GPU

RAM : 4GB/ 6GB  

இன்டர்நெல் மெமரி : 64GB 

பின்புற கேமரா : 12-megapixel primary sensor and a 5-megapixel secondary sensor with Dual Pixel autofocus, 1.4-micron pixels, and AI portrait 2.0

முன்புற கேமரா : 20-megapixel primary sensor and a 2-megapixel secondary sensor, coupled with 4-in-1 super pixel and AI face unlock capabilities

பேட்டரி : 4,000mAh, ஒருமுறை சார்ஜ் செய்தால் இரு நாட்கள் நீடிக்கக் கூடியது.

விலை : Mobile with 4GB RAM – 15000Rs, Mobile with 6GB RAM – 17000Rs.

மேலும் இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவெனில், தண்ணீரிலிருந்து மொபைலை பாதுகாக்கும் வகையில் P2i coating பாதுகாப்புடன் இந்த ரெட் மீ நோட் 5 ப்ரோ வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘ரெட் மீ நோட் 5 ப்ரோ’வைப் பொல ‘ரெட் மீ நோட் 6 ப்ரோவும்’ விற்பனையில்சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.