புதிதாக ஓட்டுநர் உரிமம் பெற்ற 49வது நிமிடத்திலேயே ஓட்டுநர் உரிமத்தை இழந்த இளைஞர்!

புதிதாக ஓட்டுநர் உரிமம் பெற்ற 49வது நிமிடத்திலேயே ஓட்டுநர் உரிமத்தை இழந்த இளைஞர்!

பலர் பல விசித்திரமான விஷயங்களை செய்து சாதனை புரிவது வழக்கம். அந்த பட்டியலில் தற்பொழுது ஜெர்மனியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் இணைந்துள்ளார். 

ஜெர்மனியை சேர்ந்த இளைஞர் ஒருவர், ஓட்டுநர் உரிமம் வாங்கிய 49 நிமிடத்திலேயே 50 கி.மீ வேகத்தில் மட்டுமே  செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த இடத்தில் 95 கி.மீ வேகத்தில் சென்றுள்ளார். இதனை சிசிடிவி கேமராவில் பார்த்த ஜெர்மன் காவல்துறையினர், அந்த இளைஞரின் ஓட்டுநர் உரிமத்தை 4 ஆண்டுகளுக்கு தடை செய்து 16 ஆயிரம் ரூபாய் அபராத தொகையும் வசூலித்துள்ளனர். இதன் மூலம் கொடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ஓட்டுநர் உரிமத்தை இழந்து உலக சாதனை படைத்துள்ளார். 

இதுகுறித்து அந்த இளைஞரிடம் விசாரித்த பொழுது காரில் இருந்த தன் நண்பர்களிடம் தன் திறமையை நிரூபிக்கவே இதுபோன்று செய்ததாக கூறினார். சில விஷயங்கள் பல ஆண்டுகளாக நீடிக்கும். ஆனால் சில விஷயங்கள் ஒரு மணி நேரம் கூட நீடிக்காது என வேடிக்கையாக ஜெர்மன் போலீசார் கூறியுள்ளனர்.

ஜெர்மனியில் உள்ள டொர்ட்மண்டு நகரத்தில் நடந்த இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.