வவுனியாவில் சம்பவம்…!கள்ளக்காதல் போதை!! உயிரை இழக்கும் நிலையில் குடும்பப் பெண்

முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் வசித்து வந்த வவுனியாவினை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்து ஆபத்தான நிலையில் 25.11.18 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்,

வவுனியாவினை சேர்ந்த குடும்பத்தினை தண்ணீரூற்றினை சேர்ந்த இளைஞன் ஒருவர் முள்ளியவளையில் தொழில் செய்யலாம் என்று அழைத்து வந்து ஒருபிள்ளையுடன் கணவரும் மனைவியுமாக வாழ்ந்து வந்துள்ளார்கள். இவர்களில் மனைவியுடன் இளைஞனுக்கு ஏற்பட்ட தகாத உறவினை தெரிந்த கணவன் மனைவியனை விட்டு பிரிந்து சென்று வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த ஒருஆண்டுகளாக குறித்த இளைஞன் பிள்ளையின் தாயுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இன்னிலையில் குறித்த இளைஞனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் குடும்பமாக வாழ்ந்த குடும்ப பெண்ணின் நகைகள் பணங்கள் என்பனவற்றை அபகரித்து சென்றுள்ளார்.

யாருமே இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த குடும்ப பெண் குறித்த இளைஞனின் செயலால் விரக்தியுள்ள நிலையில் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.