​ட்விட்டர் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த தோழிகள்!

​ட்விட்டர் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த தோழிகள்!

2006ம் ஆண்டு தனது சிறுவயதில் விடுமுறை நாளில் தான் சந்தித்த பெண் தோழி ஒருவரை ட்விட்டர் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கண்டுபிடித்துள்ளார் ப்ரீ எனும் பெண்மணி.

அதாவது, ப்ரீ அவரது தோழியான ஹெய் உடன் 2006ம் ஆண்டில்  கப்பலில் பயணித்துள்ளார். அந்த சமயத்தில் தான் ஹெய் உடன் அவர் நட்பு பாராட்டியுள்ளார். அந்த சமயத்தில் இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.  

இதையடுத்து கடந்த 24ம் தேதி ப்ரீ, தனது ட்விட்டர் பக்கத்தில் ஹெய் உடன் எடுத்த அந்த புகைப்படத்தை பதிவிட்டு, ஹெய்யை அவரது சிறந்த தோழியாக நினைப்பதாகவும், அந்த பெண்னை காண அனைவரின் உதவியும் தேவைப்படுகிறது எனவும் கேட்டுக்கொண்டார். அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை காண மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன். இந்த டுவிட்டை அவர் பார்த்தால் ரீடுவிட் செய்து மீண்டும் அவரைக் கண்டுபிடிக்க உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 

ப்ரீ பதிவிட்ட இந்த டுவீட்டை சமூகவலைதளத்தில் பலர் பகிர்ந்ததையடுத்து, அந்த டுவீட் வைரலானது. இதையடுத்து 25ம் தேதியன்று பிரீயுடன் அப்புகைப்படத்தில் உள்ள ஹெய் அந்த ட்வீட்டை, ரீட்வீட் செய்து அவரது தற்போதைய படத்தையும் பகிர்ந்துள்ளார்.
 

இதையடுத்து 12 ஆண்டுகள் கழித்து ட்விட்டர் மூலம் இணைந்த தோழிகள் இருவரும் ட்ரெண்டாகி வருகின்றனர். இதைப்பார்த்த பலரும் அவர்களை மகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.