செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாசா விண்கலம்

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாசா விண்கலம்

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் (Mars) வெற்றிகரமாக தரையிறங்கியது.

செவ்வாய்க்கிரகத்தின் நிலப்பரப்பை ஆழமாக ஆய்வு செய்யும் நோக்கில் கடந்த மே மாதம், நாசாவின் இன்சைட் விண்கலம் செவ்வாய்க்கிரகத்துக்கு புறப்பட்டது. 548 மில்லியன் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்ட இந்த விண்கலம், செவ்வாய்க்கிரகத்தில் வெற்றிகரமாக தற்போது தரையிறங்கியுள்ளது.

செவ்வாய்க்கிரகத்தில் இன்சைட் விண்கலம் வெற்றிகரமாக இறங்கியதை தொடர்ந்து, நாசா விஞ்ஞானிகள் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர். செவ்வாய்க்கிரகத்தை அடைந்துள்ள இன்சைட் விண்கலம் எடுத்து அனுப்பியுள்ள புகைப்படத்தை நாசா தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. 
 

செவ்வாய்க்கிரகத்தில் உருவாகும் அதிர்வுகள், வெப்ப பரிமாற்றங்கள் குறித்து இந்த விண்கலம் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.