ஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரி மாணவர்கள் சாதனை

ஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரி மாணவர்கள் சாதனை

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான வலு தூக்குதல் (Powerlifting) போட்டிகள் செப்டம்பர் 07 ம் 08 ம் திகதிகளில் அரனாயக ராஜகிரிய கல்லூரி உள்ளக அரங்கில் நடைபெற்றன.

தேசிய மட்டத்திலான இவ்வலு தூக்குதல் போட்டிகளில் ஹெம்மாத்தகமை அல் அஸ்ஹர் கல்லூரி மாணவர்கள் மற்றும் கொடேகொட முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக இப்போட்டிகளில் கலந்து கொண்ட ஹெம்மாதகமை பிரதேச பாடசாலை மாணவர்கள் பலர் சாதனை படைத்துள்ளமையானது, இன்னும் அவர்களை ஊக்குவிக்க வேண்டிய விடயமாகும்.

அல் அஸ்ஹர் கல்லூரி உடற் கல்வி ஆசிரியர் எம்.எப்.ஏ நஸார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அல் அஸ்ஹர் கல்லூரியின் விளையாட்டு துரை பயற்றுவிப்பாளரான ஒஷாத ரத்னாயக அவர்களினால் பயிற்றுவிக்ப்பட்ட மாணவர்களே இச்சாதனைகளை நிலை நாட்டியுள்ளனர்.

குறுகிய காலத்தில் பாடசாலையில் புதிதாக நியமனம் பெற்ற ஒஷாத ரத்னாயகவின் பயிற்றுவிப்பினாலும் எம்.எப்.ஏ நஸார் ஆசிரியரின் மேற்பார்வையில் ஒன்றினைந்த பயிற்றுவிப்பினாலும் இச்சாதனைகள் நிலை நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அல் அஸ்ஹர் கல்லூரி கௌரவ அதிபர் எம்.ஆர்.எம் அக்ரம், உப அதிபர் ஏ.எஸ் அஜ்மீர் ஆகியோரின் பூரண ஒத்துழைப்பும் விளையாட்டுத்துரையை வளர்ப்பதில் காட்டும் அக்கரையும் இங்கு நினைவு கூறப்பட வேண்டும்.

அல் அஸ்ஹர் கல்லூரி மாணவர்களான மூவர் இப்போட்டிகளில் கலந்து கொண்டவர்களில் சாதனைகளை நிலை நாட்டியுள்ளனர்.

18 வயதின் கீழ் ஆண்களுக்கான வலு தூக்குதல் போட்டியில் 105 கிலோகிராம் எடை போட்டியில் பங்குபற்றி எம்.எப்.எம் ஸுஹைல் முதலாம் இடத்தை பெற்று கல்லூரிக்கும் ஹெம்மாதகமை பிரதேசத்திற்கும் புகழ் சேர்த்துள்ளார்.

18 வயதின் கீழ் 49 கிலோ கிராம் எடை கொண்ட போட்டியில் கலந்து கொண்ட எம்.ஏ.எம் பர்ஹான் மூன்றாம் இடத்தை சுவீகரித்துக் கொண்டார்.

மேலும் 16 வயதின் கீழ் 93 கிலோ கிராம் எடை வலு தூக்குதல் போட்டியில் எம்.என்.எம் உமர் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டார். ஆறு மாணவர்கள் அல் அஸ்ஹர் கல்லூரி சார்பில் கலந்து கொண்டதில் மூவர் தேசிய மட்டத்தில் இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இச்சாதனை தொடர்பில் கருத்து தெரிவித்த உடற் கல்வி ஆசிரியர் எம்.எப்.ஏ நஸார் அவர்கள், எமது கல்லூரி மாணவர்கள் மாகாண மற்றும் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு சாதனைகள் படைத்துள்ளனர். ஆயினும் வலு தூக்குதல் போட்டியானது எமக்கு புதிய ஒன்றாக இருந்தமையும், இதற்கான பயிற்றுவிப்பாளர் ஒஷாத ரத்னாயக அவர்கள் எமது கல்லூரிக்கு நியமனம் பெற்று ஒரு மாத காலத்தில் குறுகிய கால பயிற்றுவிப்பின் மூலம் இச்சாதனைகள் நிலை நாட்டப்பட்டமையானது ஒரு வரலாற்று சாதனையாகுமென மேலும் குறிப்பிட்டார்.

கல்லூரியின் கல்வி, உடற் கல்வி மற்றும் விளையாட்டுத்துரையை வளர்ப்பதில் கரிசனை காட்டிவரும் அதிபர் கௌரவ அக்ரம், உப அதிபர் கௌரவ அஜ்மீர், உடற்கல்வி ஆசிரியர் கௌரவ நஸார், பயிற்றுவிப்பாளர் ஒஷாத ரத்னாயக ஆகியோரின் முயற்சிக்கு ஹெம்மாதகமை மக்கள் சார்பில் பாரட்டுக்கள்.(அ)

-நியாஸ் ஸாலி-

செய்தி ஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரி மாணவர்கள் சாதனை தொடுகரையிடமிருந்து