தேசிய விளையாட்டு விழா இன்று ஆரம்பம்

தேசிய விளையாட்டு விழா இன்று ஆரம்பம்

தேசிய விளையாட்டு விழா இன்று (24) 45 ஆவது தடவையாகவும் பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

விளையாட்டு துறை அமைச்சால் ஏற்பாடு செய்யப்படும் இவ்விழாவில் நான்கு நாட்கள் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறும் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வீர, வீராங்கனைகள் பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கை சென்றடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இன்று ஆரம்பமாகும் போட்டிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இம்முறை போட்டிகளில் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வீர, வீராங்கனைகள் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பங்குபெறவுள்ளார்கள். போட்டிகள் பல கட்டங்களாக நடைபெறவுள்ளன. சில குழு போட்டிகள் பல நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

 தேசிய விளையாட்டு விழாவில் சாதனைகளை நிலைநாட்டும் வீர, வீராங்கனைகளுக்கு பணப்பரிசில்களும் வழங்கப்படுமென விளையாட்டு துறை பணிப்பாளர் நாயகம் தம்மிக்க முதுகல தெரிவித்துள்ளார்.    (மு)

 

செய்தி தேசிய விளையாட்டு விழா இன்று ஆரம்பம் தொடுகரையிடமிருந்து