உலக கிண்ண மகளிர் ஹொக்கி போட்டியை இரு நாடுகள் இணைந்து நடாத்த தீர்மானம்

உலக கிண்ண மகளிர் ஹொக்கி போட்டியை இரு நாடுகள் இணைந்து நடாத்த தீர்மானம்

உலகக் கிண்ண ஹொக்கி 2023 ஆம் ஆண்டுக்கான தொடர் இந்தியாவில் நடத்தப்படும் என சர்வதேச ஹொக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.

சர்வதேச ஹொக்கி சம்மேளனத்தின் நிர்வாகக்குழு கூட்டம் சுவிட்சர்லாந்தில் உள்ள லாசான் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் படி எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை ஆடவர் உலகக் கிண்ண ஹாக்கி தொடர் இந்தியாவில் நடத்தப்படவுள்ளது.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டில் மகளிருக்கான உலகக் கிண்ண தொடரை ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. இந்தத் தொடர் ஜூலை 1 முதல் 22ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடவர் மற்றும் மகளிர் உலகக் கிண்ண தொடரின் ஆட்டங்கள் நடைபெறும் நகரங்களை தொடரை நடத்தும் நாடுகள் பின்னர் அறிவிக்கும் எனவும் சர்வதேச ஹொக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.

உலகக் கிண்ண ஹொக்கி தொடரை நடாத்த இந்தியாவுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது இது  4ஆவது முறையாகும்.

இதன் மூலம் அதிக முறை உலகக் கிண்ண தொடரை நடத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற உள்ளதாகவும் கூறப்படுகின்றது.   (மு)

செய்தி உலக கிண்ண மகளிர் ஹொக்கி போட்டியை இரு நாடுகள் இணைந்து நடாத்த தீர்மானம் தொடுகரையிடமிருந்து