விளையாட்டில் சூதாட்டம்: தடுப்பதற்கு புதிய சட்டம் நிறைவேற்றம்

விளையாட்டில் சூதாட்டம்: தடுப்பதற்கு புதிய சட்டம் நிறைவேற்றம்

தேசிய விளையாட்டுக்களுடன் தொடர்புள்ள சூதாட்டத்தை தடுப்பது தொடர்பான சட்டமூலம் நேற்று  ஏகமனதாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தினூடாக ஆட்டநிர்ணயம், மோசடி, சட்டவிரோதமான பந்தயம் பிடித்தல் என்பவற்றை தடுக்கவும் விசாரணை நடத்துவதற்காகவும் விசேட புலனாய்வு பிரிவு அமைக்கப்பட இருப்பதோடு, நீதிமன்றத்தினூடாக குற்றவாளியாக அறிவிக்கப்படுபவருக்கு 2 இலட்சம் ரூபா அபராதமும் 3 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்படவுள்ளது.

இது தவிர பந்தயம் பிடிப்பதற்கும், அதனை ஊக்குவித்து அதற்கு உடந்தை இருக்கும் நபர் ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் அல்லது 10வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனையை விதிப்பதற்கும் அச்சட்டத்தில் விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த சட்டமூலத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாந்து முன்வைத்துள்ளார். (மு)

 

 

செய்தி விளையாட்டில் சூதாட்டம்: தடுப்பதற்கு புதிய சட்டம் நிறைவேற்றம் தொடுகரையிடமிருந்து