வேட்பாளர் கோட்டாபயவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் தேரருக்கு குற்றச்சாட்டு

வேட்பாளர் கோட்டாபயவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் தேரருக்கு குற்றச்சாட்டு

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் பிரஜாவுரிமை தொடர்பில் உண்ணாவிரதம் இருக்கும் கலாநிதி இங்குருவத்தை சுமங்கள தேரரின் நடவடிக்கையை தான் ஒருபோதும் அங்கீகரிப்பதில்லையெனவும் தமது பீடத்தின் எதிர்ப்பையம் தெரிவித்துக் கொள்வதாக செய் ஜீன் பீடத்தின் மாகாநாயக்கர் இங்குருவத்தே பியநந்த தேரர் அறிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கையை முன்னெடுப்பார் எனவும், இந்த தேரர் பிக்குவொன்றுக்குப் பொருத்தமற்ற விதத்தில் செயற்படுவதாகவும் குறித்த தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.

செய் ஜிங் பௌத்த பீடத்துக்கு எந்தவித அறிவித்தலும் இன்றி, அனுமதியையும் பெறாமல் குறித்த தேரர் பொருத்தமற்ற விதத்தில் செயற்படுவதாகவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.   (மு)

செய்தி வேட்பாளர் கோட்டாபயவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் தேரருக்கு குற்றச்சாட்டு தொடுகரையிடமிருந்து