வடிசாராயம் காய்ச்சிய இருவர் செம்பியன்பற்றில் கைது!

வடமாராட்சி செம்பியன்பற்றில் சட்டவிரோதமாக வடிசாரயாத்தை உற்பத்தி செய்த இருவர் சிறப்பு அதிரப்படையினர் சுற்றிவளைத்துக் கைது செய்துள்ளனர்.

இன்று அதிகாலை நடந்த சுற்றிவளைப்பில் வடிசாராயம் காய்ச்சிய தரக,  பிளாஸ்டிக் கொள்கலன்கள், குழாய்கள், வாளி மற்றும் 45 லீட்டர் வடிசாாரயமும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு 65 வயது எனவும் மற்றவருக்கு 25 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரையும் பளைக் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.